Thursday, July 17, 2014

வீழ்படிவு

 

 

நான்கு அல்லது ஆறாகவுமிருக்கலாம்

எண்ணிக்கையில் தெளிவில்லை

பழுத்து விழுந்தது

பனம்பழம்

கறுத்துத் திரண்ட புஜங்கள்

விழுந்த விசையில் வெடித்தது

பீய்ச்சியடித்தது மஞ்சள் களிம்பு

பூமிப்பந்தெங்கும்

எண்ணிக்கை தெரியாத

எறும்புகள் சாரிசாரியாக

அணிதிரண்டன

ஈரம் உலர்ந்துபோய்க்கிடந்த

மூன்று கொட்டைகளுக்காக

எஞ்சியிருந்த வடலிகள்

எரிந்து சாம்பலாயின

வயதில் மிகவும் மூத்த

கற்பகத்தருக்களோ

வழமையேயான திமிரோடு

நிமிர்ந்து

ஆனந்த பிரசாத்

''காற்றுவெளி'' 2014 ஆனிமாத மின்னிதழில்
வெளிவந்தது.
  • Santhiya Thiraviam நான்கு அல்லது ஆறாகவுமிருக்கலாம்

    எண்ணிக்கையில் தெளிவில்லை


    பழுத்து விழுந்தது

    பனம்பழம்
  • Jeyakumar Antoni அதிசூட்சுமமான சேதியொன்றைத் தந்து, மூப்பை அண்மித்தும், புஜங்களைத் திரட்டி நெஞ்சை நிமிர்த்த வைக்கிறது கவிதை. பாராட்டுக்கள் !
  • Kandiah Murugathasan · 23 mutual friends
    (ஏலையா க.முருகதாசன்)

    இக்கவிதையை எழுதிய ஆனந்த பிரசாத்திற்கு வணக்கத்துடன் நன்றிகள்.தமிழர் வாழ்வோடு நண்பனாயிருப்பது பனைமரம். நான் ஆசிரியராவிருந்து நடததிய ஏலையா சஞ்சிகையின் அட்டைப்படமும் என்றும் பனைமரத்தையே அலங்கரித்திருந்தது.

No comments:

Post a Comment