Thursday, July 17, 2014

பரிணாமம்

 

 

துளித்தேன் சிந்தியது
வரைபடங்களினூடே
எறும்புகள்
தேர்ந்த கலைஞனின்
கோடுகளாய்
ஒரு எழுத்தனின்
வரிகளாய்
கனபரிமாணங்களோடு
சிலந்தி வலைக்குள்
செதுக்கிய நேர்த்தியாய்
வாய்பிளந்து என்னை
விழுங்க முயலும்
இந்த நிலத்தின்
வயிற்றுக்குள் இருந்து
வண்ணத்துப்பூச்சியாய்
இன்னுமொரு
மகரந்த தேவைக்காய்
ஆனந்தபிரசாத்
  • Santhiya Thiraviam துளித்தேன் சிந்தியது
    வரைபடங்களினூடே
    எறும்புகள்

    தேர்ந்த கலைஞனின்
    கோடுகளாய் nice
  • Kandiah Murugathasan · 23 mutual friends
    அன்புடன் திரு.ஆதவன்

    உங்கள் கவிதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன் இலக்கியச்சந்திப்பு மலரின் பின்பக்க அட்டையில் பார்ததேன். அளவெட்டி வயலுக்கு வெங்காய நடுகைக்கு வரம் தொழிலாளர்கள்,குருவிகள் ,காகங்கள் கிளிகள் என உங்கள் பார்வைக்கூடாக யதார்த்தமாக எழுதிய கவிதை அது.
    அiது உங்கள் கைவசமிருந்தால் இங்கே பதியுமாறு வேண்டுகின்றென்.மகாகவி திரு.உருத்திரமூர்த்தி அவர்களையும் புதுக்கவிதை எழுத வைத்ததும் அம்பனை - அளவெட்டி வயல்வெளியே.

    அன்புடன்

    ஏலையா க.முருகதாசன்
  • Thiru Thirukkumaran எறும்புகள்
    தேர்ந்த கலைஞனின்
    கோடுகளாய்

    ஒரு எழுத்தனின்
    வரிகளாய்
    கனபரிமாணங்களோடு
    சிலந்தி வலைக்குள்
    செதுக்கிய நேர்த்தியாய்
    வாய்பிளந்து என்னை
    விழுங்க முயலும்
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அருமையான படைப்பு
  • Kaliya Murthy · 35 mutual friends
    துளித்தேன் எனினும் குறிஞ்சித்தேன்

No comments:

Post a Comment