Friday, October 25, 2013

மனக்கணக்கு

 


இடது புறமாக ஒருக்களித்து

படுத்துக்கொண்டிருக்கிறேன்...

இமைத்திரையில்

நாளதுவரையில் பட்டவைகள்

சலனித்தன....

மொத்தமாக வாழ்நாளில்

உத்தரவாதமில்லாது போன

நாட்களை கழித்து

எஞ்சியிருந்தவற்றை

எழுதிக் கணக்கிட்டு

ஐந்தொகையை பதிய முயல்கிறேன்

நீங்களும் நானும்

நானும் நீங்களும்

வரவு செலவுகளாய்

லாப நஷ்டங்களாய்

உடனிருந்து கணக்கோடு

உடன்படிக்கை செய்தீர்கள்....

மூன்றுகால் என்றாலும்

முயல்தான்...முயல்தான்.....

இலக்கங்களோடு வாழ்வை

நகர்த்துவதென் இலக்கல்ல.....

எனக்கென்று

வழங்கப்பட்ட நாட்கள்

ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை.....

உதிர்ந்துகொண்டிருக்கும்

இலைகளை

மரங்கள்

கணக்குவைத்துக்கொள்வதில்லைதான்!

இழந்த நாட்களை

எண்ணப்போய்.....இப்போது

நெடுஞ்சாண்கிடையாக

படுத்துக்கொண்டிருக்கிறேன்

நான் மரமல்ல......!

ஆனந்தபிரசாத்.
 

  • VJ Yogesh “உதிர்ந்துகொண்டிருக்கும்

    இலைகளை
    ...See More
  • Kiruba Pillai summa kavalai padaamal poi vaasiyungo pulavare .. ainthokaiyai . (joke )
  • Santhiya Thiraviam மொத்தமாக வாழ்நாளில்

    உத்தரவாதமில்லாது போன


    நாட்களை கழித்து

    எஞ்சியிருந்தவற்றை

    எழுதிக் கணக்கிட்டு

    ஐந்தொகையை பதிய முயல்கிறேன்
  • Ponniah Karunaharamoorthy எண்களால் அமையும் ஆளப்படும் லௌகீக உலகில் இயையமுடியாது தவித்து, அகவயவுலகில் மட்டிலும் ஜீவிதத்தைத் துய்க்க விரும்பும் ஒரு ஆத்மாவின் விசாரம். இதயத்தை நெருங்கி வருகிறது.
  • Vanitha Solomon Devasigamony மனக்கணக்கில் முழ்கிவிட்டேன்.......!
    ".எனக்கென்று வழங்கப்பட்ட நாட்கள்
    ஒன்றிலிருந்து பூஜ்யம்வரை."

    இழந்த நாட்களைஎண்ணப்போய்.....இப்போது
    நெடுஞ்சாண்கிடையாக........"
  • Thiru Thirukkumaran இலைகளை
    மரங்கள்
    கணக்குவைத்துக்கொள்வதில்லைதான்!

    இழந்த நாட்களை
    எண்ணப்போய்.....இப்போது
    நெடுஞ்சாண்கிடையாக
    படுத்துக்கொண்டிருக்கிறேன்
    நான் மரமல்ல......!//
  • Chithan Prasadh பிறப்பு முதல் இறப்பு வரை கணக்கிடும் உலகத்தில் தான் நாம் இருக்கிறோம்! மரங்களைப் போல நம்மால் இருக்க முடிவதில்லைதான்!
  • Rajaji Rajagopalan வாழ்வு உத்தரவாதமில்லாதது. மூன்று கால் என்றாலும் முயல் முயல்தான். இலக்கங்களோடு வாழ்வை நகர்த்துவதும் ஒரு இலக்கா? உதிர்ந்துகொண்டிருக்கும் இலைகளை மரங்கள் கணக்குவைத்துக் கொள்வதில்லை. இழந்த நாட்களை எண்ணும் மனக் கணக்கு உங்களுக்கு நன்றாய்த்தான் வந்திருக்கிறது.
  • Pena Manoharan ’எண்ணும் எழுத்தும்’ என்றும் எண்ணுவதும் எழுதுவதும் என்றே விதிக்கப்பட்டிருக்கிறது வாழ்க்கை நமக்கு.மனதில் நிற்கும் ஐந்தொகை உங்கள் ‘மனக்கணக்கு’.
  •  

காகிதம்

 


    இன்னமும் ஒரு வெள்ளாப்புக்காக.....

இந்த நடுநிசியில்
எழுதுகிற தாள்களின்மேல்...

கண்ணீரின் திவலைகள்தான்

காய்ந்து கறையானது....

தாள்களை அழுக்காக்குவது

நான்தான்.

காகிதங்கள் ஒருபோதும்

என்னைக் கடிந்ததில்லை

ஒன்பது ரசங்களை

கொட்டித்தீர்த்தாலும்

அடிப்பெட்டிக்குள்ளோ....

எங்கேயோ வீட்டின் இடுக்கிலோ...

பதுங்கிக்கிடக்கும்.......

நாட்காட்டியின்
கிழிந்த தாள்களல்ல அவை

வெள்ளை வெளேரென்று முதலிலும்

பழுப்படைந்து....மூப்பிலும்....

நிறங்கள் எவ்வாறு மாறினும்

எழுத்து சாவதில்லை.

ஆனந்தபிரசாத்

 

  • Pena Manoharan அருமை ஆனந்த் பிரசாத்.’எழுத்து சாவதில்லை’ .எழுக.எழுதுக.
  • VJ Yogesh //வெள்ளை வெளேரென்று முதலிலும்

    பழுப்படைந்து....மூப்பிலும்....


    நிறங்கள் எவ்வாறு மாறினும்

    எழுத்து சாவதில்லை.// ஒரு போதும் சாகாது..!
  • Seelan Ithayachandran நினைவிருக்கிறதா...நண்பா.
    'ஓ....சகோதரியே...'உன் கவிதை.

    திருமலை நகரின்
    வீதிச் சுவர்களில் நெற்றிக் கண்ணானது.
    மக்களை வெகுண்டெழச் செய்து,
    இன மத பேதமின்றி அணி திரட்டியது.

    40 ஆண்டுகள் கடந்தும்...
    அந்த எழுத்து இன்னும் சாகவில்லை தோழா......
    சாவினையும்
    அது சாகடித்துவிடும்.

    - இதயச்சந்திரன்
  • Seelan Ithayachandran என் எழுத்தின் மூலவர்களே இந்த நண்பர்கள்தான். அதைக்கூறுவதில் எந்தச் சங்கடமும் எனக்கு இல்லை. நான் மிக மிகச் சிறியவன். என்னை இன்னமும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அற்புதங்கள் இவர்கள்.
    புதுவை நீ எங்கேயடா........காகிதத்தைப்பார் . அசந்து விடுவாய்.
  • Thiru Thirukkumaran வெள்ளை வெளேரென்று முதலிலும்

    பழுப்படைந்து....மூப்பிலும்....
    ...See More
  • Vanitha Solomon Devasigamony உயிரோட்டமான கவிதை . அருமை .
    " வெள்ளை வெளேரென்று முதலிலும்
    பழுப்படைந்து....மூப்பிலும்....
    நிறங்கள் எவ்வாறு மாறினும் எழுத்து சாவதில்லை".
  • குழந்தைநிலா ஹேமா எழுத்துக்கள் பிறப்பது சாவதற்காகவுமில்லை.அருமை வெள்ளாப்பு !
  • Santhiya Thiraviam நாட்காட்டியின் கிழிந்த தாள்களல்ல அவை

    வெள்ளை வெளேரென்று முதலிலும்


    பழுப்படைந்து....மூப்பிலும்....

    நிறங்கள் எவ்வாறு மாறினும்

    எழுத்து சாவதில்லை.
  • Santhiya Thiraviam கவிதை . அருமை
  • Kiruba Pillai வாவ் ..கவிதை கவிஞரே ...எழுத்து சாவதில்லை காதலும் தான் -வெள்ளை வெளேரென்று முதலிலும் ...பழுப்படைந்து மூப்பிலும் ..மாறாத பெண்மையும்- ..நவரசங்களுடன் தாங்களும் ...நல்லதோர் கவிதை மனதுக்கு வெகு ருசி...இன்னும் பல கவிதைகளுக்கு காத்திருக்கிறோம் .
  • Subramanian Ravikumar எழுத்து சாவது மட்டுமில்லை மூப்படைவதில்லை பழுப்படைவதில்லை...
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "எழுத்து சாவதில்லை..." அருமை
  • Vettivelu Selliah Gunaratnam எல்லா -எல்லோருடைய எழுத்துக்களும் சாவதில்லை ,என்றாலும் ,
    காணமல் போவதுண்டு !