Thursday, July 17, 2014

வண்டவாளம்

 

 





அந்த மாம்பூவுக்குள்

எதேச்சையாக புகுந்தேன்

வழமையேயான

மதுபான விடுதிக்குள்ளிருந்து

விடுதலையாகமுன்னம்

பூத்துத்தொலைத்தது

காயாகி கனியாகி

மஞ்சளடித்த பழமாகி

விதைக்குள்ளேயே

சிறைப்பட்டேன்

சில பொழுதுகள் கடந்தன

மாமரத்து கொந்தராத்துக்காரன்

உலுக்கிய உலுப்பலில்

தரைதட்டிய என்னை

தோலுரித்து தின்றவன்

என்னசுவை என்னசுவையென

இரண்டுதடவை சொன்னான்

சூப்பித்தள்ளிய கொட்டைக்குள்ளிருந்து

எப்படியோ தப்பித்துவிட்டேன்

ஆனந்தபிரசாத்
  • Santha Shanmugam எல்லாமே நம்மைமயும் நம்மைசுற்றியிருக்கும் சுற்றாடலையும் யதார்த்தமான கவிதைகளாக இருக்கிறது. இந்த மாம்பழத்துக்குள் இருக்கும் புழுவுக்கு இப்படி ஒரு வர்ணனை வாழ்த்துக்கள்..........
    மாமரத்து கொந்தராத்துகாரனுக்குமட்டும் உள்மஞ்சளடித்த பழம் எப்படி தெரிகிறதோ??? சிறுவயதிலிருந்தே எனக்குள் ஒரு கேள்விக்குறி...
  • Naavuk Arasan சொல்லாமல் சொல்லும் உத்தி , கடைசி வரியில் புழு ,அடப் போட வைத்தது ஒரு நல்ல உருவகம்,,,உங்களின் படித்த பல கவிதைகளில் எனக்கு விளங்கி ரசிக்க வைத்த கவிதை,,,
  • Santha Shanmugam வாய்பேசா உயிரினங்களுக்கும் கவி பாடும் கலைஞர்........பல கோடி வாழ்த்துக்கள்.
  • K Shiva Kumar நல்ல ஒரு வர்ணனை வாழ்த்துக்கள் Anand Prasad.
  • VJ Yogesh புழு போல நாமும் தப்பித்துக் கொண்டிருக்கிறோம்.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ".. சூப்பித்தள்ளிய கொட்டைக்குள்ளிருந்து
    எப்படியோ தப்பித்துவிட்டேன்.." அருமை
  • Santhiya Thiraviam அருமை வாழ்த்துக்கள்.
  • Pena Manoharan ’மாமரத்துக் கொந்தராத்துக்காரன்...’ அடடா.அருமை.

No comments:

Post a Comment