Thursday, April 11, 2013

காற்றடிக்கிறதே......

 

காற்றடிக்கிறதே......
மழையடிக்கிறதே.....
காவலென்னும்......
முள்வேலியிலே......நம்
கதை முடிகிறதே......
உயிர்கனவழிகிறதே.
(காற்றடிக்கிறதே)
நீள்வயலின்......நேர்கோடுகளில்.....
நெடும்பாதை நடை நடந்தோம்....
ஆழ்கடலின்.....அலை மேடுகளில்......
அனுதாபத் திரை கடந்தோம்......
குயிலிழந்த பாடல்களாய்
கோலிழந்த குருடர்களாய்
மயிலிழந்த ஆடல்களாய்
மயங்குகின்ற வாழ்வினிலே.....
(காற்றடிக்கிறதே)
நாம்பிறந்து தவழ்ந்த நிலம்....
நாம் நடந்து கடந்த புலம்.....
சாம்பல் பூத்த மேடானது.....
ஆம்பல்களும் நாணல்களும்
ஆள் மயக்கும் மல்லிகையும்
நாட்குறிப்பில் ஏடானது.......
தோள்கொடுத்தோம்......
துயர் தீருமென்றே.....
தொடுவானை தொட முயன்றோம்....
வாழ்வினிலும்......
சிறு தாழ்வினிலும்......
வருநாளை நினைத்திருந்தோம்.......
குயிலிழந்த பாடல்களாய்
கோலிழந்த குருடர்களாய்
மயிலிழந்த ஆடல்களாய்
மயங்குகின்ற வாழ்வினிலே.....
(காற்றடிக்கிறதே)
ஆனந்தபிரசாத்.
 

 
  • Vanitha Solomon Devasigamony தோள்கொடுத்தோம்......
    துயர் தீருமென்றே.....
    தொடுவானை தொட முயன்றோம்....
    வாழ்வினிலும்......
    சிறு தாழ்வினிலும்......

    வருநாளை நினைத்திருந்தோம்.......
    குயிலிழந்த பாடல்களாய்
    கோலிழந்த குருடர்களாய்
    மயிலிழந்த ஆடல்களாய்
    மயங்குகின்ற வாழ்வினிலே.....
  • VJ Yogesh //நாம்பிறந்து தவழ்ந்த நிலம்....

    நாம் நடந்து கடந்த புலம்.....

    சாம்பல் பூத்த மேடானது.....


    ஆம்பல்களும் நாணல்களும்

    ஆள் மயக்கும் மல்லிகையும்

    நாட்குறிப்பில் ஏடானது......// என்ன சொல்லுறதெண்டே தெரியேல்லை அண்ணா...
  • Nathan Gopal நாம்பிறந்து தவழ்ந்த நிலம்....
    நாம் நடந்து கடந்த புலம்.....
    சாம்பல் பூத்த மேடானது.....
    ஆம்பல்களும் நாணல்களும்
    ஆள் மயக்கும் மல்லிகையும்
    நாட்குறிப்பில் ஏடானது
  • மன்னார் அமுதன் //தொடுவானை தொட முயன்றோம்....
    வாழ்வினிலும்......
    சிறு தாழ்வினிலும்......
    வருநாளை நினைத்திருந்தோம்.......//
  • Thiru Thirukkumaran குயிலிழந்த பாடல்களாய்
    கோலிழந்த குருடர்களாய்
    மயிலிழந்த ஆடல்களாய்
    மயங்குகின்ற வாழ்வினிலே.....//
  • Natarajan Jayapalan · Friends with Thankar Bachan
    Wherever I read or heard they are called as Elam Tamils .Don"t call them as Tamils, Call them as Elam Indians. The Govt of India is worried about Fiji Indians Africa indians, Mouritious Indians and not about Elam Indians. If the Govt of India changes its attitude towards Elam Indians their life will be blossomed.i
  • Poovaiashok Kumar · 2 mutual friends
    வணக்கம் ,அன்பின் உற வினரே ,எம்மை நண்பராக ஏற்று கொண்டமைக்கு நன்றி ,எமது சொந்தஊர் சிதம்பரம் அருகில் உள்ள பூந்தோட்டம் ஆகும் .எமது ஊர் தந்தை பெரியாரால் திரவிடகொள்கையால் ஈர்க்கப்பட்டு 1946 முதல் எந்த வழிப்பாட்டு தலங்கள் அழிக்கப்பட்டு ,கடவுளை விட கல்விமுக்கியம் எனக்கொண்டு ,படித்து வீட்டுக்கு ஒருவர் அரசு வேலையில் (அனைத்து துறைகளிலும் }உள்ளனர் அண்ணாவால் :திராவிட நாடு என்று பெயர் சுட்டப்பட்ட சேர்ப்பு பெற்றது ;பெரியாரால் சிறப்பு ;குடியரசு:மலர் எண்கள் ஊர்பெயரில் வந்தது ,உலக பண்பாட்டு பன்னாட்டுமையம் வெளியட்ட 100 ஆண்டுகள் என்ற புத்தகத்தில்வந்து சிறப்பு பெற்றகிராமம் [,பட்டிக்குப்பம் சிகாமணி அவர்களின் சகலன் நான்]
  • Bala Durairajan no words sir...im keeping silent...but my support is always for tamilians. i never see difference in indian tamilians & srilankan tamilians...i just see tamilians !
  • Sampath Kumar · Friends with Thankar Bachan
    nanbaraga etramaikku nanri anbudan sampath

ஓட்டம்......


ஒழுகிய விந்தின்
கடைசித்துளி உலருமுன்பு
சிலுவைக்கும்...சீருடைக்கும்
பயந்துபோய் ஓடிவிட்டேன்

ஆணிகளைத் தூக்கிக்கொண்டு
அவர்கள் துரத்தியும்
அறைய முடியவில்லை

ஒரு எல்லைக்குமேல் துப்பாக்கிகள்
வலுவிழந்து போயின
ஆணிக்குத் தப்பி விட்டேன்
முள்முடிக்கும் தப்பி விட்டேன்

இராட்சத 'பூட்ஸ்' களுக்கடியில்
இறந்து படாமலும் கூட....

இங்கேயோ.....
வான்கோழிச் செட்டைக்குள்

பத்திரமாய், பாதுகாப்பாய்
தொடரும் வாழ்வு
கனவுகளில் சாப்பாடு
கையோடு தாம்பத்யம்
மனச் சூட்டினின்றும்
பாதுகாத்துக் கொள்ள...
ஆசைச் செருப்பை
அணிந்து கொண்டேன்

பொய்யென்று புரியுங்கால்
போதைத் துணையிருப்பு

'டாலர்' சிறகடித்து
பொய்வானை வட்டமிட்டேன்

மலத்துக்குள் திளைக்கும்
வண்டாக.....
உருண்டோடும் காலம்

நாளாக நாளாக
ஆசைகளை துரத்திக்கொண்டு
ஆணிகள் மட்டும் வந்தன
ஒவ்வொன்றாய்...முதலிலும்
என் உடலின் ஜீவ அணுக்களுக்கு
சமமாக முடிவிலும்....

மீண்டும் ஓடவாரம்பித்தேன்
என் சிறகு பிய்ந்து போய்
செருப்பு அறுந்து போய்

ஒரு எல்லைக்கு மேல் என்னால்
நகர முடியவில்லை.....

உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
ஆணிகளாய் அறைந்தன.

ஆனந்தபிரசாத்.

  • Nathan Gopal நாளாக நாளாக
    ஆசைகளை துரத்திக்கொண்டு
    ஆணிகள் மட்டும் வந்தன
    ஒவ்வொன்றாய்...முதலிலும்
    என் உடலின் ஜீவ அணுக்களுக்கு

    சமமாக முடிவிலும்....
    அருமையான வரி
  • VJ Yogesh //மீண்டும் ஓடவாரம்பித்தேன்

    என் சிறகு பிய்ந்து போய்

    செருப்பு அறுந்து போய்...//


    வாழ்தலின் யதார்த்தத்தை வரிகள் சுமக்கின்றன..!
  • Thiru Thirukkumaran பெரு மூச்சைச் தவிர வேறு என்ன தான் என்னால் சொல்ல முடியும்? தாக்கப்பட்டறிவால் மனசைத் தொட்ட கவி
  • Sanjayan Selvamanickam மிகவும் ரசித்தேன்
  • Pena Manoharan சிந்தனை தெளிவாக இருக்கும்வரை சிலுவையில் அறையப்படுவதும் பின் உயிர்த்தெழுவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.அதுதான் உயிரோட்டமுள்ள படைப்பாகப் பரிமளிக்கும்.வாழ்த்துக்கள் ஆனந்த் பிரசாத்.
  • Ganeshalingam Kanapathipillai ஓட்டம் என்றதலைப்பில் மிக அருமையான கவிதை..பிரசாத் கவிதை நூல்கள் இதுவரை வெளியிட்டிருக்கிறீர்களா?
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அற்புதமான படைப்பு.
  • Vanitha Solomon Devasigamony நாளாக நாளாக
    ஆசைகளை துரத்திக்கொண்டு
    ஆணிகள் மட்டும் வந்தன
    ஒவ்வொன்றாய்...முதலிலும்
    என் உடலின் ஜீவ அணுக்களுக்கு

    சமமாக முடிவிலும்....

    மீண்டும் ஓடவாரம்பித்தேன்
    என் சிறகு பிய்ந்து போய்
    செருப்பு அறுந்து போய்

    ஒரு எல்லைக்கு மேல் என்னால்
    நகர முடியவில்லை.....

    உயிரணுக்கள் ஒவ்வொன்றிலும்
    ஆணிகளாய் அறைந்தன.
  • Aangarai Bairavi Oru maranathai ull vaangi padhivu seivadhu pola irundhadhu.
  •