Thursday, July 17, 2014

மரபணுக்கள்

 

 

ஏற்கனவே
சிதிலமாகிக்கிடந்த
மதிற்சுவரில்
மிதிவெடியில் தெறித்த
மிச்சங்கள் ஒட்டிக்கிடந்தன
காய்ந்தும் காயாமலும்
பழுப்பேறிய காரைபெயர்ந்த
மஞ்சள் சுவரில்
சிகப்புநிறப்புள்ளிகள்
அழகுதான்
இந்த நிறங்கள்
எப்போதுமே எனக்குப்பிடித்தவை
தந்தை செதுக்கிய சிலையை
அம்மா பிதுக்கிய விளைவில்
என் பாட்டிக்கும்
முப்பாட்டனுக்கும்
பேர்விளங்கவைக்கும்
பூட்டனாக
காய்ந்தும் காயாமலும்
ஆனந்தபிரசாத்
  • Pena Manoharan ’தந்தை செதுக்கிய சிலையை / அம்மா பிதுக்கிய....’ கொஞ்சம் வலிந்த வன்முறையாகத் தோன்றினாலும்,அருமை.வாழ்த்துகள்.
  • Santhiya Thiraviam ஏற்கனவே
    சிதிலமாகிக்கிடந்த
    மதிற்சுவரில்

    மிதிவெடியில் தெறித்த
    மிச்சங்கள் ஒட்டிக்கிடந்தன
    காய்ந்தும் காயாமலும்... அருமை.வாழ்த்துகள்.
  • Thiru Thirukkumaran பேர்விளங்கவைக்கும்
    பூட்டனாக
    காய்ந்தும் காயாமலும்//
  • Sulaiha Begam Thanthai thawaru seydaar....thaayum idam koduthaar... Wanthu piranthu wittom...perum bandham walarthu wittom....
  • Kiruba Pillai ammaa pithukkiya vilaivil . romba kurumbu sir neenga
  • Jeyakumar Antoni மிகவும் பரிச்சயமான போர்முக நினைவுகளூடாக, உயிர்ப்பும், பிறப்பும் இருப்பும் காய்ப்பும் தேய்வுமென மரபணு பற்றிய விஞ்ஞான விளக்கமொன்றினூடாகக் கவிதை விரிவது சிறப்பு !
  • VJ Yogesh //மிதிவெடியில் தெறித்த

    மிச்சங்கள் ஒட்டிக்கிடந்தன


    காய்ந்தும் காயாமலும்//
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அருமை
    மிச்சங்களிலும் எச்சங்களிலும் உயிரணுக்கள் தொடரும்
  • Santhiya Thiraviam அருமை Sir
  • TSounthar Sounthar சுருங்க சொல்லி இனம் புரியாத உணர்வுகளை கிளர்த்துவதுடன் சிந்திக்கவும் வைக்கும் கவிதை.அருமை.

No comments:

Post a Comment