Thursday, July 17, 2014

கவி'தை'

 

 


மனிதனுக்கு முதல்நாள்

மாட்டுக்கு மறுநாளாய்

இனியதாய் பொங்கல்!

இலங்கைத் தீவினிலோ

முன்னதுக்கு சொல்லில்லை

பின்னதுக்கு புல்லில்லை

என்னத்தை பொங்கி.....என்ன....?

எண்றெண்ணாமல்

இங்கிருக்கும் நாங்கள்

இன்னபமாய் கூடி

பொங்குவோம்.....

பொங்கலை

பொது விடுமுறை நாளாக்க

சங்கற்பம் பூணுவோம்

தை பிறந்து விட்டாலோ

தானாய் வழி பிறக்குமாம்....!

மெய்யாக புரியவில்லை

மனிதனுக்கா.....மாட்டுக்கா?

இலவச இணைப்பு:

பொங்கற் பா.

தங்கமாய் நெல்(யாரோ) விளைக்க

சங்கத்து தமிழில் புதிய

ஜங்கியை அணிந்துகொண்டு

பொங்கலை பாடுவோமே.



எரிச்சல் தாங்காமல் எழுதியவன்

ஆனந்தபிரசாத்



 
  • Ponniah Karunaharamoorthy இனியதாய் பொங்கல்!

    இலங்கைத் தீவினீஒரு லோ


    முன்னதுக்கு சொல்லில்லை

    பின்னதுக்கு புல்லில்லை

    என்னத்தை பொங்கி.....என்ன....?

    எண்றெண்ணாமல்

    இங்கிருக்கும் நாங்கள்

    இன்னபமாய் கூடி

    பொங்குவோம்.....
    என்கிற அடிகள் 2 தடவைகள் அமைந்தது தற்செயலாகவா........கவிஞரே?
  • Anand Prasad Ponniah Karunaharamoorthyநன்றி நண்பரே....
    என் தவறை சுட்டிக்காட்டியமைக்கு.....
    இதற்கும் ஒரு சப்பைக்கட்டு......

    எதையும் இரண்டுமுறை சொன்னால்தானே
    எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது?
    இது எப்படியிருக்கிறது?
    புத்தாண்டு வாழ்துக்கள் நண்பரே.
  • Thiru Thirukkumaran என்னத்தை பொங்கி.....என்ன....? //
  • Ponniah Karunaharamoorthy உங்களுக்கும் எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
  • Rajaji Rajagopalan முன்னதுக்கு சொல்லில்லை

    பின்னதுக்கு புல்லில்லை..//
    ...See More
  • Solai Kili கவிதையில் ?!.போன்ற குறிகளை தவிர்த்தல் நல்லது .இது எனது கருத்து .படைப்பை திறந்து விடுங்கள் ....
  • Ravi Kathirgamu மனிதனுக்கு முதல்நாள் மாட்டுக்கு மறுநாள் எல்லாம் ஒரு சம்பிரதாயமும் நம்பிக்கையும் தான், சலிப்புடன் அவநம்பிக்கையுடன் வரத்தான் செய்கிறது.! பொங்கல் வாழ்த்துக்கள்.!!!
  • Pena Manoharan மூன்றாவது அடியில் ‘இனியதாய் பொங்கல்’ தவிர்த்திருந்தால் வேகம் கூடி இருக்குமோ கவிஞரே.அதுசரி ‘ஜங்கி’ [Underwear] தானா?கண்ணில் பட்டுக் கொள்ளக் காலம் ஆயிட்டுது.
  • VJ Yogesh கவி தைக்கிறது!
  • Lawrence Vasuthevan எரிச்சல் தாங்காமல் எழுதியவன்
  • Vanitha Solomon Devasigamony "என்னத்தை பொங்கி. என்ன.... என்றெண்ணாமல்,
    இங்கிருக்கும் நாங்கள், இன்பமாய் கூடி பொங்குவோம்........"
    சகோதரருக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
  • Santhiya Thiraviam இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
  •  
     

No comments:

Post a Comment