Wednesday, November 28, 2012

In search of infinity

 

 

Beneath the mountains
a huge secret buried.... underneath
silly little bunch of clouds
claims the victory....
hesitate not to reveal the sun
Inevitably these occurrences
escalating life all the time
stipulate the thirst of greed
manuscripted most of the theme
While I was driving on the highway
the sublimed rays of the sun....
mysteries behind the rocks....
Appeared as well as their own
The ringing tones of my daily life
Haunting....and chasing all around
Existence extremely bombarded
Living is not always safe and sound
I realize it's me and my thoughts
sabotaged....
the whole sequence of the nature!
suddenness of the blindfold
dragged me through disruption...
evolves me to the future
A moment of stopping so subtle
pulled my breath of divinity
everything back to the resurrection
Dissolves my life long vanity.
Anandprasad




கேள்வி

கேள்வி


கேட்பதற்காகவே
பிறந்து
கேட்டுக்கொண்டிருப்பதற்காகவே
வளர்ந்து
கேட்டதற்காகவே
மடிந்தும் போனேன்!
ஒரு பள்ளிக்கூடத்தை
தூக்கிக்கொண்டு அலைந்தேன்
பின்பு
ஒரு நீதிமன்றத்தை
தூக்கிக்கொண்டு அலைந்தேன்
விளங்கிக்கொள்வதற்கும்
விசாரிப்பதற்கும்
வித்யாசம் தெரிந்த போதில்.....
பதில் மட்டும்
கேள்வியாகி விட்டது!
ஒன்று மட்டும் புரிகிறது...
கேள்வி கேட்பதை விடவும்
மெளனமாக
கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!!!
ஆனந்தபிரசாத்.

  • VJ Yogesh //விளங்கிக்கொள்வதற்கும்

    விசாரிப்பதற்கும்

    வித்யாசம் தெரிந்த போதில்.....


    பதில் மட்டும்

    கேள்வியாகி விட்டது!//
  • VJ Yogesh மௌனமாகவிருத்தல் பல சமயங்களில் எமது பலமாகவிருந்தாலும் சில சமயங்களில் அதுவே பலவீனமாகவும் மாறக்கூடும்! கருத்துள்ள கவிதை அண்ணா..!!
  • Vanitha Devasigamony மனிதம் மரணித்து விட்டது .
  • Vathiri C Raveendran கேள்வி கேட்பதை விடவும்

    மெளனமாக...........good
  • Rajaji Rajagopalan எல்லாம் அறிந்தபிறகு ஒருவனின் முடிவு:
    கேள்வி கேட்பதை விடவும்
    மெளனமாகக்
    கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!!!

    கற்றதனாலாய பயனென்ன? பெரும் சந்தேகத்துக்குப் பதில் தராமலே தப்பிக்கொள்கிறார், கவிஞர்.
  • Siva Mathivathany நல்ல கவிதை அண்ணா ... சில சமயம் மௌனம் கூட பிரச்சனை தான் தோழரே.
  • Bharath Kennedy கேள்வி கேட்பதை விடவும்

    மெளனமாக................
  • Power Ful Brain கேட்க வேண்டிய நேரத்தில் கேட்கப்படாமல் விடும் கேள்விகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியா பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் அண்ணா.
  • Emiliyanus Judes விளங்கிக்கொள்வதற்கும்

    விசாரிப்பதற்கும்

    வித்யாசம் தெரிந்த போதில்.....


    பதில் மட்டும்

    கேள்வியாகி விட்டது!
  • Padmaja Narayanan மரணித்தாலும் பரவாயில்லை.
    விடை தெரியாமல் போகக்கூடாது.
  • Thiru Thirukkumaran ஒன்று மட்டும் புரிகிறது...
    கேள்வி கேட்பதை விடவும்
    மெளனமாக
    கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!//
  • Iniyavilamban Senthamilon · 19 mutual friends
    குற்றத்தை சுட்டுவாய் என்று எண்ணினேன்... ஆனால் மௌனமாய் இருந்துவிட்டாய்...
  • Arasan Elayathamby Vey Philosopical Concept ! Simply the best !
  • Pr Rajan very touching!~
  • Anand Prasad Rajaji Rajagopalan''தப்பித்து வந்தானம்மா......பாவம்
    தனியாக நின்றானம்மா.....காலம்
    கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல்...!!!''
  • Rajaji Rajagopalan தனிமையில்தான் ஞானம் பிறக்கிறதாமே! பிறக்குமென்று எதிர்பார்ப்போம்.
  • Anand Prasad ஒரு 24 மணிநேரத்தில் எனது கேள்விக்கு இவ்வளவு
    பதில்கள் வந்தது இதுவே முதல்தடவை!!!
    நன்றி முகனூல் நட்புகளே....சாதகமோ...பாதகமோ....
    எதுவாயினும் மனித நேயம் என்னும் சாராம்சத்தை
    விதைக்க முற்படுகிறேன். என் முதற்கண் நன்றி....
    I am so greatful to Mr. Mark Zuckerberg.
  • Suriya Doss மெளனம் மேலானதல்ல என்பதைச் சொல்லவே இத்தனை பாராட்டுகள்.அழகு Anand Prasad
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..மெளனமாக
    கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்" அதைத்தான் விடாது கடைப்பிடித்துத் தப்பிப் பிழைக்கிறோம். அருமையான கவிதை
  • Aangarai Bairavi Oru udaippai aerppaduthum kavithai.
  • Pena Manoharan கவிதையும் படமும் பலகேள்விகளைக் கிளர்த்துகிறது.வாழ்த்துக்கள் ஆனந்த்பிரசாத்.