Tuesday, November 18, 2014

விசாலிக்குட்டியும் தம்பியும்

 

நிலவுக்கு அவ்வளவு
வெளிச்சமில்லை
''சூரியபகவான் எள்ளுப்போல
தெளித்ததை வைத்துக்கொண்டு
மாதமொருமுறை
இந்தக்கூத்தடிக்கிறது......''
பாட்டி சொன்னாள்
இருட்டில் வாழ்வது
இயல்பேயாம்
பலவிதத்திலும் நன்மையேயென்று
பாலம்போட்ட ஆற்றுக்கு
போகும் வழியெங்கும்
சிதிலமாகிக்கிடந்தன பாதை
நள்ளிரவில்
சொரிந்து தள்ளின பாலைப்பழங்கள்
கனரக வாகனங்கள்
மிகமெதுவாக ஊர்ந்தன
''ஒட்டுப்போட்ட கொட்டிலுக்குள்
வெட்டவெளிச்சம் வேண்டாமடி விசாலி......''
பாட்டியின் பாட்டின்
அலுப்பூட்டும் பல்லவி
தார்ச்சாலையின் கரையோரம்
காதைவைத்துக்கொண்டிருந்தாள்
''உஷ்.....'' என்று
தம்பிக்கும் எச்சரித்தபடி
எப்படியோ
வெடித்துக்கிடந்த நெடுஞ்சாலை
தன்னை செப்பனிட்டுக்கொண்டது.
ஆனந்த் பிரசாத்
 
  • Thiru Thirukkumaran ஒட்டுப்போட்ட கொட்டிலுக்குள் வெட்ட வெளிச்சம் வேணாம்
  • George Singarajah ஒரு இனிய கவிதை

    இப்படியே எழுதி


    எமக்கு நூலாக்கித் தாருங்கள்

    தமிழுக்கு

    ஒரு ம்காகவி தேவைப்படுகிறது

    நன்றி

    உங்களுக்கு
    George Singarajah
  • Vanitha Solomon Devasigamony '.ஒட்டுப்போட்ட கொட்டிலுக்குள்
    வெட்டவெளிச்சம் வேண்டாமடி விசாலி......''
    இருட்டில் வாழ்வது இயல்பேயாம்.....

    கனரக வாகனங்கள் ...........
    ''உஷ்.....'' என்று தம்பிக்கும் எச்சரித்தபடி விசாலிக்குட்டி!
  • Lakshmi Chitoor Subramaniam கடைசி வரி புரியவில்லை ஆனந்த். விளக்கவும்.
  • VJ Yogesh //வெடித்துக்கிடந்த நெடுஞ்சாலை
    தன்னை செப்பனிட்டுக்கொண்டது.// அண்மையில் எங்கட ஊருக்கு ஜனாதிபதி வரும் போது இப்படித்தான் வெடித்துக் கிடந்த சாலைகள் தம்மை செப்பனிட்டுக் கொண்டன / செப்பனிடப் பட்டன!
  • Kiruba Pillai எப்படி வெடித்து கிடந்தது செப்பனிட்டது..எப்படி செம்மையாக முடியும் ...? கவிஞரே ..
  • Anand Prasad Lakshmi Chitoor Subramaniam இந்த சம்பவம் நடந்து மறுநாள் எனது
    நிர்வாணக் கண்களால் சாலையின் ஓரத்தில்
    இரண்டு குழந்தைகளும் தரைக்கு சமாந்தரமாக....

    துங்கிப்போயின....என்று வைத்துக்கொள்ளுங்களேன்.
    இந்த கோரத்தை எழுதவேண்டாமென்று பார்த்தேன்.
    Haunted by these images encroached my memory cells
    As a result I was depressed quite a while
    Vomiting through writing offered serenity.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நினைவுகளை மீட்ட வைக்கும் இனிய வரிகள்

No comments:

Post a Comment