Tuesday, November 18, 2014

கலங்கரைவிளக்கம்

 
 
 
 
 

நள்ளிரவில் ஆழ

நடுக்கடலில் வெண்நுரையை

மெள்ள வகிடெடுத்து

விரைகிறது எனதுகலம்

சுக்கான் பிடித்து

சுழற்றுகிற இறுமாப்பில்

எக்காளமிட்டு

எகிறியது என்மனது

யாரோ கிரேக்கத்து

வியாபாரியின் கப்பல்

ஏராய்க்கடலின்

எழுபரப்பும் உழுதுவர

எனைநம்பி

முப்பத்து ஏழுஉயிர்கள் துயில

முழுநிலவும் வானத்தே

முளைக்கும் நட்சத்ரங்களுமாய்

நழுவுகிற நீர்ப்பரப்பில்

நானொருவன் குறித்த

திசையில் பயணிக்கும்

திறனாய்ந்த சாரதியாய்

இசையின் சுரங்களைப்போல

இழைந்து பேரலைகளுடன்

சமரசங்கள் செய்த

சாமர்தியங்கள் எல்லாம்

அமர வாசகங்கள்

ஆழ்கடலை வென்றேன்

விழத்தெரியா நின்றேன்

விழுந்தேன் எனதுமண்ணில்

உழத்தெரி யாத உடல்

ஆனந்தபிரசாத்

  • Vanitha Solomon Devasigamony ..இசையின் சுரங்களைப்போல இழைந்து பேரலைகளுடன் சமரசங்கள் செய்த
    சாமர்தியங்கள் எல்லாம் அமர வாசகங்கள்...
  • N.Rathna Vel அருமை. வாழ்த்துகள்.
  • VJ Yogesh //முழுநிலவும் வானத்தே

    முளைக்கும் நட்சத்ரங்களுமாய்


    நழுவுகிற நீர்ப்பரப்பில்

    நானொருவன் குறித்த

    திசையில் பயணிக்கும்

    திறனாய்ந்த சாரதியாய்//
  • Sabes Sugunasabesan Excellent expressing. Develops with So pride and positivity and the last two lines brings one down to a reflective state. This has several dimensions I am letting the last two lines to work out any other meanings for me. Masterly stuff Ananth.
  • Santhiya Thiraviam அமர வாசகங்கள்

    ஆழ்கடலை வென்றேன்


    விழத்தெரியா நின்றேன்

    விழுந்தேன் எனதுமண்ணில்

    உழத்தெரி யாத உடல்!!1
  • Santhiya Thiraviam அருமை. வாழ்த்துகள் SIR
  • Ravi Kathirgamu ஆழ்கடலை வென்றேன் விழந்தேன் எனது மண்ணில் உழத்தெரியாத உடல்
  • Thiru Thirukkumaran இசையின் சுரங்களைப்போல

    இழைந்து பேரலைகளுடன்


    சமரசங்கள் செய்த

    சாமர்தியங்கள் எல்லாம்

    அமர வாசகங்கள்

    ஆழ்கடலை வென்றேன்

    விழத்தெரியா நின்றேன்

    விழுந்தேன் எனதுமண்ணில்

    உழத்தெரி யாத உடல்//
  • Kiruba Pillai விழுந்தேன் எனதுமண்ணில்

    உழத்தெரி யாத உடல்

    கடல் - தற்காலிகம் தெரியாத உழவுத்தொழில் . இழந்த மண் ..வாவ் சூப்பர் கவிஞரே
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan ".. ஆழ்கடலை வென்றேன்
    விழத்தெரியா நின்றேன்
    விழுந்தேன் எனதுமண்ணில்.." அருமை
  • Rajaji Rajagopalan யாரோ கிரேக்கத்து... எனத்தொடங்கி அமர வாசகங்கள். என்பதுவரை ஒரே வசனத்தில்... பொறுங்கள் எனக்கு மூச்சு முட்டுகிறது. உங்களுக்கு நீங்களே கலங்கரை விளக்கமாகி நிற்பதுதான் விதியோ!
  • Anand Prasad

No comments:

Post a Comment