Wednesday, October 23, 2013

சொட்டுவாழ்வு...அல்லது கிணறும் தவளையும்!

 



மேகங்கள் கலைந்து போன

ஒரு மாலையில்......

கைத்தடியில்லாத பிறைநிலவை

காண நேர்ந்தது

நிறைமாத சந்திரனை.......

நித்ய கர்ப்பிணியாய்

பார்த்திருந்த மாதங்கள்!

சில தவளைகளுக்கு

கிணறுதான் எல்லை

குளம்....ஆறு....கடலென.....
விரியும் குணங்களொன்றும்
வாய்த்ததில்லை....

மழைக்கால கூச்சல்களும்

நிலாக்கால பாய்ச்சல்களும்.....

பாசி அடர்ந்திருந்த கிணற்றுக்குள்

சிருஷ்டிக்கப்பட்டிருந்த சிற்றூர்

மீன்கள் நீந்தின....அவ்வப்போதில்

சிறு நண்டுக்குஞ்சுகளும்...

வந்தும்....போயின

நாங்களும் ஒன்றாயிருந்தோம்

யாரெல்லாமோ

துலாக்கோல் போட்டு

ஓட்டை வாளியால்

நீர் இறைத்துக்கொண்டேயிருந்தார்கள்

சொட்டிய நீரினால்

இன்னமும் எங்களுக்கோர் வாழ்வு.

ஆனந்த பிரசாத்


  • Thiru Thirukkumaran யாரெல்லாமோ

    துலாக்கோல் போட்டு
    ...See More
  • N.Rathna Vel அருமை. நன்றி.
  • Iyyappa Madhavan · Friends with VJ Yogesh and 253 others
    மனதை நெகிழ்த்தும் கவிதை...
  • Iyyappa Madhavan · Friends with VJ Yogesh and 253 others
    வாழ்வின் விரக்தியில் சொட்டும் நீர்த்துளிகள் ஓட்டை வாளியில் என்றெழுதும்போது இவ்வாழ்வின் அநர்த்தம் அருவருப்பு ஊட்டுகிறது.
  • Vanitha Solomon Devasigamony சில தவளைகளுக்கு கிணறுதான் எல்லை;
    குளம்....ஆறு....கடலென விரியும் குணங்களொன்றும் வாய்த்ததில்லை;
    மழைக்கால கூச்சல்களும் நிலாக்கால பாய்ச்சல்களும்.....
    பாசி அடர்ந்திருந்த கிணற்றுக்குள் சிருஷ்டிக்கப்பட்டிருந்த சிற்றூர்....
  • Francesca Kanapathy Thank you uncle for sharing your beautiful poem with me!! It reminded me of a story I read when I was small: The Water Bucket....(http://showcase.netins.net/.../Sacred/Stories/bucket.html) Please read it!
    showcase.netins.net
    For a full two years this went on daily, with the bearer delivering only one and... a half pots full of water in his master's house. Of course, the perfect pot was proud of its accomplishments, perfect to the end for which it was made. But the poor cracked pot was ashamed of its own imperfection, and m...See More
  • Emiliyanus Judes யாரெல்லாமோ
    துலாக்கோல் போட்டு
    ஓட்டை வாளியால்

    நீர் இறைத்துக்கொண்டேயிருந்தார்கள்
    சொட்டிய நீரினால்
    இன்னமும் எங்களுக்கோர் வாழ்வு.
  • Chithan Prasadh "சில தவளைகளுக்கு

    கிணறுதான் எல்லை


    குளம்....ஆறு....கடலென.....
    விரியும் குணங்களொன்றும்
    வாய்த்ததில்லை...."
  • Valarmathy Siva ஆதங்கம் தேங்கி நிற்கும் கவிதை,அருமை
  • Naavuk Arasan ஒ அப்படியா, கலக்குங்க கவிஞ்சரே !!!!!
  • Ravi Kathirgamu அறிவின் வெளிப்பாடு , அற்புதமான கவிதை.நிஜத்தையும் நல்ல உள்ளங்களையும் நேசிப்போம்.
  • Kris Muthukrishnan Sabash!!!!!!!!!!!!!sotkal thathrubam!!!!!!!!!!!Enkal country side vazhvin prathipalippu.
  • குழந்தைநிலா ஹேமா கொட்டிய நீரிலும் தளைக்கும் நம் வாழ்வு.நம்புவோம் !
  • VJ Yogesh //...."துலாக்கோல் போட்டு

    ஓட்டை வாளியால்
    ...See More
  • Yayini Lingam நிலாக்கால சிறு
    நண்டுகள் மீன்கள்
    என யார் எல்லாமோ
    ...See More
  • Rajaji Rajagopalan 0-0-0-0-0-0-0-0

    இயல், இசை, நாடகம் ஆதியாம் முத்தமிழில் ஆழமாய்த் தடம் பதித்து ஆனந்திப்பவரிடமிருந்து கை நிறையக் கிடைத்த இன்னொரு பிரசாதம் இது! இதற்குள் சுரந்துகொண்டிருக்கும் சற்கரையையும் கடிபடாமல் நழுவிக்கொண்டிருந்த முந்திரிப் பருப்பையும் கண்டுபிடித்துச்
    சுவைக்க ஆரம்பித்துக் கடைசியில் புறங்கையையும் நக்கவேண்டி வந்தது.

    சந்திரனை.......
    நித்ய கர்ப்பிணியாய்
    பார்த்திருந்த மாதங்கள்!...//

    "சில தவளைகளுக்கு
    கிணறுதான் எல்லை…//

    “மீன்கள் நீந்தின....அவ்வப்போதில்
    சிறு நண்டுக்குஞ்சுகளும்...
    வந்தும்....போயின…//

    சொட்டிய நீரினால்
    இன்னமும் எங்களுக்கோர் வாழ்வு..// கிடைத்தால் போதுமே!

No comments:

Post a Comment