Wednesday, October 23, 2013

மரக்குத்தி.

 


பாகம் (2)

தவறிப்போய் ஒரு

மிதி வெடியில் கால்பதித்தேன்

சுவறிப்போய்

சதைத்துண்டங்கள்

உலக வரைபடத்தின்

ஒவ்வொரு மூலையிலும்

ஒட்டிக்கிடந்தன!!!

பாகம் (1)

ஒரு காலம்.......

என்மீது அமர்ந்திருந்துதான்

இவர்கள் இசைத்தார்கள்......

பிரண்டு கிடந்த என்னுடல் மேல்

பிறளாதேயிருந்த

பெருமரத்தின் நிழலில்.....

எத்தனை இனிய மாலைகள் ஏகின?

எத்தனை இலக்கியங்கள்

அரசியல்கள் அலசப்பட்டன?

பட்டுப்போய்க்கொண்டிருந்த

எனக்குத்தெரியும்......ஒரு

சங்கத்தின் செயலாளரைப்போல......

முரண்பாடுகள் விவாதங்கள்

முறிந்தாலும் பிணைந்தாலும்

சாராயத்தின் சங்கமத்தில்

சமன்பாடு கண்டது

இயக்கங்கள் ஐந்தாயினும்

இயங்கியலே பேசினார்கள்!!!

எதிர்பாராது வெடித்துச்சிதறிய

என் திரண்டிருந்த தசைத்துண்டங்கள்

எங்கேயோ ஒரு

இறைமை தாண்டிய வெளிகளில்....

இறைந்து கிடந்தன.....

இந்த மரக்குத்தியிலிருந்து

வாழ்ந்த நட்புகள்

எங்கெங்கோ திசை தெறித்து....

சாகாமல்.....

செத்துக்கொண்டிருக்கிறது.
ஆனந்தபிரசாத்.

{இது கவிதையல்ல நண்பர்களே.....

நவனீதன், புதுவை இரத்தினதுரை,

விக்னேச்வரமூர்த்தி, அருள்ஜோதி, ஞானம், சிவதாசன்...

இந்த வரிசையில்.....

நோபர்ட், றேமன், செல்வம், வின்சென்ட், தில்லை முகிலன்

இன்னும் எத்தைனையோ சங்கமித்த
உறுப்பினர்கள் உருத்தெரியாமல்........

திருக்கோணமலை....திருமால் வீதியில்

இந்த இறந்துகொண்டிருக்கும்

மரக்குத்திக்கு தெரியும்.......

இது நமது கதையென்று!!!}

 

  • Santhiya Thiraviam திருக்கோணமலை....திருமால் வீதியில்

    இந்த இறந்துகொண்டிருக்கும்
    ...See More
  • Subramanian Ravikumar மனசு வலிக்கிறது ஆனந்த்...கவிதையும் வாழ்வின் குறிப்பும் இரண்டறக் கலந்த சொற்சித்திரம்... மரக்குத்தி எனக்குப் புதுமையான சொற்பதம். நன்று. பிரண்டு கிடந்த என்று வருகிறதே.. பிறண்டு இல்லையா? சமன்பாடு கண்டன, செத்துக் கொண்டிருக்கின்றன, உறுப்பினர்கள் என்று வர வேண்டாமா? என்றாலும் சொற்களையும் தாண்டி மிளிர்கின்றது வாழ்க்கை...
  • VJ Yogesh //மிதி வெடியில் கால்பதித்தேன்

    சுவறிப்போய்
    ...See More
  • Thiru Thirukkumaran இயக்கங்கள் ஐந்தாயினும்
    இயங்கியலே பேசினார்கள்!!!//
  • Thiru Thirukkumaran இந்த மரக்குத்தியிலிருந்து
    வாழ்ந்த நட்புகள்
    எங்கெங்கோ திசை தெறித்து....
    ...See More
  • Ravi Kathirgamu சுயநலத்திற்கும் தனிமனித உ ரிமைக்கும் இடையில் நாம் தவிப்பது ஒரு புறம் இருக்க,வீரவரலாறு வேதனையில் முடிந்திருக்க; நாம் விடியலை நோக்கி பெருமூச்சினை நித்தம் விட்டபடி....
  • George Singarajah ஆமாா்்
    வலிகளில்
  • George Singarajah என்னை எதுவோ செய்கிறது இந்தக் கவிதை
  • Kiruba Pillai இந்த மரக்குத்தியிலிருந்து

    வாழ்ந்த நட்புகள்
    ...See More
  • Yayini Lingam உங்கள் பேனாவின் எழுத்திற்கு நானும் ஓர் வாசகி ஆகிவிட்டேன் ஐயா.மனக்கிடக்கைளை வடிக்கும் விதம் மற்றவர் மனங்களை கவர்ந்து செல்கிறது...தினமும் இந்த பக்கம் வந்து பார்த்து செல்வது என் வழக்கமாகி விட்டது.
  • Vanitha Solomon Devasigamony ..... சுவறிப்போய் சதைத்துண்டங்கள்
    உலக வரைபடத்தின் ஒவ்வொரு மூலையிலும்
    ஒட்டிக்கிடந்தன.
    ...See More
  • Pena Manoharan iஇந்த ‘மரக்குத்தி’க்கவிதை காலம் காலமாய் மரங்கொத்திப் பறவையாய் ரணப்படுத்தும் மனசை.
  • வலிக்கிறது. "..இறந்துகொண்டிருக்கும்
    மரக்குத்திக்கு தெரியும்.......
    இது நமது கதையென்று.."
  • Rajaji Rajagopalan இறவாத கதைகள்! சாகாமல் செத்துக்கொண்டிருக்கும் நட்புகளின் கதைகள். உணர்ச்சியோடும் உண்மையிலிருந்து பிறழாமலும் வடித்திருக்கிறீர்கள் கவிதையை.
  • Emiliyanus Judes எதிர்பாராது வெடித்துச்சிதறிய
    என் திரண்டிருந்த தசைத்துண்டங்கள்
    எங்கேயோ ஒரு
    ...See More
  • குழந்தைநிலா ஹேமா மரக்குற்றி நினைவுகளைக்கூட கிளறித்தானே எறிந்தார்கள்
  •  

No comments:

Post a Comment