Friday, July 29, 2011

கதிபேதம். (கருப்பு ஜீலை1983 நினைவாக....)















ஒருநாளின்மீது ஒருசிலநாட்கள் போட்டுச்சில

பலநாட்கள் கழித்திருந்தோம்! --- அட

ஓர்நாள்நடை நிமிரும்!!! ஓய்வோம்.....எனதான

ஓர்மத்திற் களித்திருந்தோம்.

வருநாள் வளமாகும்......வரலாற்றின் கணிதத்தில்

வகுநாளாய் எண்ணி வாழ்ந்தோம். --- அதன்

வெகுமானம் இஃதென்ற பெருமாயைக்குள் ஆழ்ந்து

அவமானத்தில் அமிழ்ந்தோம்.

வருமானம் தனைநாடி..... சிலமானம் போனாலும்

வளமேதான்....என்றிருந்தோம். ----- இட

வலமாக மேற்கிலும், வடக்கிலும், கிழக்கிலும்

பலமாக வேரூன்றினோம்.

கருவான நாள்முதல் கனவான வாழ்வினில்

களிபேருவகை கொண்டோம். ----- ஒரு

கடிவாளமில்லாமல் அடையாளமில்லா....அ

கதியான வாழ்வு கண்டோம்!!!

2 comments:

  1. Kannathasan Krishnamoorthy எந்த தமிழனாலும் வாழ்நாள் வரை மறக்க முடியாத சம்பவம்.அதை அருமையாக கவிவடிவில் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
    July 28, 2011 at 8:46pm · Unlike · 1.







    Thirumavalavan Kanagasingam ‎//ஒரு

    கடிவாளமில்லாமல் அடையாளமில்லா....அ

    கதியான வாழ்வு கண்டோம்!// அருமை !
    July 28, 2011 at 9:28pm · Unlike · 1.







    Gobinath Na கணிதத்தின் எல்லா அணுகுமுறைகளாலும் அடையமுடியாத தீர்வாக எமது உள்ளத் தீச்சுவாலை எரிகிறது. எரிவதற்கு எல்லாம் தீர்ந்தபின்னே இப்போது உயிர்த்துடிப்பின் விதையை எரித்தெரித்து இழுக்கிறது.
    July 29, 2011 at 3:26am · Unlike · 1.








    Thiru Thirukkumaran · 69 mutual friends
    தெய்வத்தால் ஆகாதென்றெண்ணித் தான் தெருவில் இறங்கினோம் முடியுமட்டும் முயன்று மெய் வருத்தினோம் முடிவில் கூலிகளாய் ஆனோம்.(”தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்”) உலகில் விடுதலை அடைந்த நாடுகள் எல்லாம் இதைப் போல பன்மடங்கு விலையை பல ஆண்டுகளாகக் கொடுத்துத் தான் தமக்கென ஒரு சுதந்திர தேசத்தை அமைத்தார்கள், அவர்களும் கூட சுதந்திரத்துக்காகப் போராடும் அந்த நாட்களின் போது மனம் சோர்வடைந்த இடைவெளியில் இப்படியாக எம்மைப் போலத் தான் பேசி இருப்பார்கள் பேசினார்கள். 2nd world war collections of poems என்ற நூலை அண்மையில் பார்க்கக் கிடைத்த போது இதே உணர்வுகள் தான் எங்கும் விரவிக்கிடந்தது, ஆனால் அதே மனிதர்கள் தான் எப்படியோ விடுதலை நோக்கித் தொடர்ந்தும் நடந்தார்கள், விடுதலை அடைந்தார்கள், ஒரு இனம் விடுதலை பெறவேண்டுமாயின் அதற்கென உலகில் சில தகுதிப்பாடுகள் இருக்கிறது, அது எமக்கும் இருக்கிறதா..?
    July 29, 2011 at 9:50am · Unlike · 1.







    Vathiri C Raveendran இனவாதம் இருக்கு மட்டும்
    இந்த நாட்டிலென்றும்
    எது நேரமானாலும்
    எழுந்திடும்தீச்சுவாலை.
    July 29, 2011 at 9:52am · Unlike · 2.







    Navam K Navaratnam நெஞ்சை நெருடும் கவிதை, ஆனந்தபிரசாத்!
    July 29, 2011 at 10:00am · Unlike · 1.







    Vj Yogesh அருமையானதும் அவசியமானதுமான கவிதை Sir!
    July 30, 2011 at 8:13am · Unlike · 1.







    Pa Sujanthan அற்புதமான வரிகள் கவியின் ஓசை இன்னும் அழகு

    ReplyDelete
  2. ஓர்நாள் எம் நடை நிமிரும் என ஒர்மத்தில் களித்திருந்தோம். ...அந்த ஓர்மம் இப்போ பெரும்பாலும் இல்லாமல் போனதே ...எல்லாவற்றிற்கும் காரணம் ஆனதோ ..அருமை .கவிதை பழையதை புரட்டி போட்டு ஒரு கேள்விக்குறியுடன் ..நிற்கிறோம்.

    ReplyDelete