Friday, August 9, 2013

பயணம்....பயணம்....

 


நதிகளின் பாதை வழியே
பயணம்...பயணம்...பயணம்
நாளும் நாளும் மன வெளியில்
சலனம்...சலனம்...சலனம்

ஸ்ருதியில்லாத வெறும் பாடல்
ஸ்வரமில்லாத இசைத்தேடல்
சுகங்களை தினம் அணைத்திட தவிக்கும்.....
உறவுகளெனும்.....
(நதிகளின்...)

எனதுயிரணுக்களிலே
இசையானாய் நீ...
எனதுணர்வுயிர் ஊறியே
மகனானாய் நீ....

தினமொரு மழலையின் பொழுதுகள்
தீட்டிய நாட்களின் கவிதைகள்
என்னைவிட்டு எங்கேயோ
ஏகாந்த பெருவெளியில்
மின்னலென மறைந்தோடும்
மயக்கமென்ன.......
(நதிகளின்)

நீரலை மீதொரு தாமரை
இலையினைப்போலொரு வாழ்வு
நீ இல்லை என்பது என்வரை
நெஞ்சினிலே பெரும் ஆய்வு

நாட்களிலே குற்றமில்லை
நானொருவன் பட்ட நிலை
கேட்பதற்கும் காண்பதற்கும்
குரலில்லை உரு இல்லை
என் மகனே....

பனிவழி பழகிய தேசம்
பகலிரவாகிய நானும்
தனிவழி போகிற போக்கில்
தயக்கமென்ன......
மயக்கமென்ன......
(நதிகளின்)
(இந்த இசைப்பாடல் உயிர் வேரறுந்து
எங்கேயோ ஒரு முகாமில் உறவிழந்து
நொந்து கிடக்கும் தந்தையாகிய என்
மதிப்பிற்குரிய கவிஞனுக்கு.....)

ஆனந்தப்ரசாத்.
  • இடுகாட்டான் இதயமுள்ளவன் அருமை ஐயா. மென்மையாக ஊடுருவி நிலைத்து போகிறது கவிதை மனதுள்.
  • Subramanian Ravikumar பனி வழி பழகிய தேசம் பகலிரவாகிய நானும் தனிவழி போகிற போக்கில்....உணர்ச்சி மிக்க பாடல் ஆனந்த்... வாழ்த்துக்கள்
  • VJ Yogesh //தினமொரு மழலையின் பொழுதுகள்
    தீட்டிய நாட்களின் கவிதைகள்
    என்னைவிட்டு எங்கேயோ
    ஏகாந்த பெருவெளியில்// ஒவ்வொரு வரியும் படிக்கும் போது நல்ல சந்தக் கோர்ப்போடு நகருகிறது..!
  • Gopaal Naathan நீரலை மீதொரு தாமரை
    இலையினைப்போலொரு வாழ்வு
    நீ இல்லை என்பது என்வரை
    நெஞ்சினிலே பெரும் ஆய்வு.. // இழப்பின் துயர் மிக்க வரிகள் // இசையின் வடிவம் பெற்றால் இன்னும் தூக்கலாக வெளிரும்.
  • Vanitha Solomon Devasigamony எனதுயிரணுக்களிலே
    இசையானாய் நீ...
    எனதுணர்வுயிர் ஊறியே
    மகனானாய் நீ....

    நாட்களிலே குற்றமில்லை
    நானொருவன் பட்ட நிலை
    கேட்பதற்கும் காண்பதற்கும்
    குரலில்லை உரு இல்லை
    என் மகனே....
    உள்ளங்களை இளக்குகின்ற உருக்கமான கவிதை வரிகள் !
    நன்றிகள் சகோதரர் ஆனந்தப்ரசாத்.
  • Thiru Thirukkumaran எனதுயிரணுக்களிலே
    இசையானாய் நீ...
    எனதுணர்வுயிர் ஊறியே
    மகனானாய் நீ.//
  • Thiru Thirukkumaran நாட்களிலே குற்றமில்லை
    நானொருவன் பட்ட நிலை
    கேட்பதற்கும் காண்பதற்கும்
    குரலில்லை உரு இல்லை
    என் மகனே.//
  • Thiru Thirukkumaran உயிரின் வலி உணர்ந்த இந்தப் பாடலை இசையோடு கேட்க மனசு ஏங்குகிறது. நெகிழ்ந்துருகிப் போனேன்..
  • Rajaji Rajagopalan 0-0-0-0-0-0-0-0-0

    ஸ்ருதியில்லாத வெறும் பாடல்
    ஸ்வரமில்லாத இசைத்தேடல்...//
    ...See More
  • Kiruba Pillai நீரலை மீதொரு தாமரை
    இலையினைப்போலொரு வாழ்வு//THUYARAM ...NAM THUYARAM ...NANRI KAVIGNARE ..ENAKKUM PAKIRNTHATHATKU
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..நாட்களிலே குற்றமில்லை
    நானொருவன் பட்ட நிலை
    கேட்பதற்கும் காண்பதற்கும்
    குரலில்லை உரு இல்லை.." அருமை

No comments:

Post a Comment