Wednesday, October 10, 2012

பாலைமரம்

பாலைமரம்


நிலவு தேய்ந்தொழுகும் நீள் இரவில்...
சேலை
கலைந்து கிடக்க கண்ணயர்ந்தேன்....
கனவாகி
பாலைக் குடைவிரிப்பில்
பகலாகி....இரவாகி...
வாலைக் குமரியிவள் வண்ணாத்திச் சிறகுகளில்
ஆவல் என்னும் தூரிகை
அழித்தெழுதும் கோலங்கள்
காவல் அரணில் காத்திருப்பும் எதிர்பார்ப்பும்
'ஆட்டிலறி' ஒன்றை அணைத்தபடி மார்பகத்தின்
சூட்டின் வெதுப்பின் சுகலயத்தில்
இமைத்திரைக்குள்
யெளவனமும் வாலிபமும்
யாத்திரைகள் போயினவாம்
அவ்வளவும் விழலாகி ஆழ்கடலில் முக்குளிக்க
எப்படியோ எந்தன் எஞ்சிய எரிதழலின்
வெப்பத்தைக் கொண்டு
வெகுசிலநாள் தெள்ளோட்டி...
யாவும் குளிர்ந்தன....
யதார்த்தமோ நத்தையென
பாவிப் படர்ந்துவர பரிதியொன்று மண்டைக்குள்
சுட்டுப் பொசுக்கியது....
ஸ்வயம் மெல்ல இருள்புலர
பட்டு வெளுத்த பரிணாமக் கழிவிரக்கம்....
சீருடையும் ஆயுதத்தின் சிற்றின்ப கவர்ச்சிகளும்
போருடைத்த இன்னபிற பொய்யான மாயைகளும்
சேலைக்குள் என்னை சிறைப்படுத்தி...
பின்னிரவில்
பாலைக்குக் கீழே படுக்கவைத்து
முகமறியா
மானுடங்கள் நிர்வாண மோகத்தில்
வரிகீறத்தான்
உடம்பில் சிறிதளவுதான்
சுரணையிருக்கென்ற
பாட்டெங்கோ கேட்டது.....
பாலையடிப் பற்றைக்குள்
கூட்டுக்களி தொலைய....
குளிர்நிலவாய் சில்லறைகள்
உருண்டோட...
வாழ்வின் உருளைகளும் ஊர்கிறது!
அன்றைக்கும் இன்றைக்கும்
அகன்ற பெரும்பாலை
என்றைக்கும் போல
என்னையே பார்த்தபடி.....
அன்று சுபீக்க்ஷத்திற்காய்.....அதன்பிறகு 'சோத்துக்காய்'...
என்றுமென் தலையில் எழுத்து.
ஆனந்தப்ரசாத்.

  • Thiru Thirukkumaran நிலவு தேய்ந்தொழுகும் நீள் இரவில்..//
  • Vj Yogesh //யதார்த்தமோ நத்தையென

    பாவிப் படர்ந்துவர பரிதியொன்று மண்டைக்குள்

    சுட்டுப் பொசுக்கியது....// //அன்று சுபீக்க்ஷத்திற்காய்.....அதன்பிறகு 'சோத்துக்காய்'...//


    என்றுமென் தலையில் எழுத்து.
  • Vj Yogesh என் அறிவுக்கெட்டியவரை கவிதை அவலமொன்றை வித்யாசமான படிமத்தோடு கூற விளைகிறது...சில விடயங்கள் சங்கேதங்களோடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நேரடியாக ஒரு விடயத்தை கவிதைப்படுத்துவதை விட சங்கேதங்களோடு கவி படைத்தல் நவீன கவிதையியலின் எழுதப்படாத விதி்... இது ஒன்றும் தவறன்று! வார்த்தைகளுக்காக கவிஞன் காத்திருத்தல் எவ்வாறு அவனுக்கு இன்ப அவஸ்தையாகின்றதோ, அது போன்றே கவிஞனின் சங்கேதங்களை அறிய முயலுதல் வாசகனுக்குக் கிட்டும் அலாதியான இன்ப அவஸ்தை..!
  • Emiliyanus Judes கனவாகி

    பாலைக் குடைவிரிப்பில்

    பகலாகி....இரவாகி...
    ...See More
  • Rajaji Rajagopalan நான் பயந்து பயந்து வாசிக்கத் துவங்கிய இக்கவிதை நான் பெண்ணாக இருந்திருந்தால் யௌவனமும் வாலிபமும் யாத்திரைபோன இன்னொரு பெண்ணின் அமுங்கிப்போன அழுகுரலை முழுமையாகக் கேட்பதற்கு முடிந்திருக்கும். ஆணாகிய என்னால் இதயம் பிழிய அழமட்டுமே முடிகிறது.

    வியட்நாம் போரின்
    போது அமெரிக்கக் காமுகர்களால் குருதி பெருகக் கிழித்தெறியப்பட்ட ஆயிரக்கணக்கான வியட்நாமிய வாலைக் குமரிகளின் அழுகுரல்கள் அந்நாடு சுதந்திரம் பெற்றதும் ஓய்ந்துபோயிருக்கலாம். ஆனால் இங்கே அன்று சுபீக்க்ஷத்திற்காய்.....அதன்பிறகு 'சோத்துக்காய்'...
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "சுபீக்க்ஷத்திற்காய்.....அதன்பிறகு 'சோத்துக்காய்'...
    என்றுமென் தலையில் எழுத்து..." எல்லோர் தலையெழுத்தும் கூட.
  • Arasan Elayathamby well, honestly i didnt get the mening of many words in this poiem, just வன்னியில உள்ள பாலை மரங்களை நினைவுக்கு கொண்டுவந்தது இந்த கவிதை ! அப்புறம் இந்த கவிதை சொல்ல வார concept புலன் பெயர்ந்த புலிகள் அறிந்தா உங்க தலையிட்கு குறி வைப்பாங்களே ?
  • Rajaji Rajagopalan Arasan Elayathamby - அரசே, நானும்தான் இக் கவிதையைப் பயந்து பயந்து வாசிக்க ஆரம்பித்தேன். பிறகு, ஒருமுறையல்ல பலமுறை வாசித்த பின்னரே Anand Prasad அவர்களின் கவிதையில் பொதிந்திருந்த செய்தியை அறிந்து அதன் மூலம் இன்று வன்னியில் வாழும் பெண்ணொருத்தியின் அவல வாழ்வை உணர முடிந்தது. இந்தப் பெண் ஒருத்தி மட்டுமல்ல அங்கு இன்று எத்தனையோ ஆயிரம் பெண்களும் கைம்பெண்களும் சிறுமிகளும் அவல வாழ்வு வாழ்கிறார்கள். அரசாங்கமோ அரசியல்வாதிகளோ செய்யமுடியாத, செய்ய அஞ்சும் AWARENESS என்னும் பணியை இலக்கியவாதிகளால் செய்யமுடியும் என்பதற்கு இக்கவிதை ஒரு எடுத்துக்காட்டு. இதை மீண்டும் வாசிக்கும்படி அன்புடன் அழக்கிறேன்.
  • Arasan Elayathamby தமிழாகளிடம் ஓரளவுதான் அறிவை எதிபர்கலாம் ,அப்புறம் சென்டிமென்டல மாறி விடுவார்கள் ,எரிகா ஜங் இன் ஒரு பெண் அவல கவிதைய என்னோட சுவரில போடதுகு ,என்னோட பெண் நண்பிகளே அருவருப்பா "இதெல்லாம் மவனே உனக்கு இப்ப தேவையா" என்றார்கள் !!

No comments:

Post a Comment