Wednesday, October 10, 2012

நடுநிலை

நடுநிலை


இது முடிவல்ல...
முடிவுக்கு வருவதற்கு
முன்பான நிலை
கருத்துச் சட்டையைக்
கழற்றிப் போட்டுவிட்டு
கொள்கைக் கோவணத்தை
அவிழ்த்தெறிந்துவிட்டு
கேட்பதற்கு தயாராவது...
இலையுதிர் காலத்து
மரங்களைப் போல
வெப்பத்தை விளங்கி...
குளிரை கிரகித்து...
நடுநிலைத்த பின்பு
நியாய வசந்தத்தில்
தளிர்த்துப் பூப்பது!
சார்புக்கு முன்பான
சத்தியத்தின் தேடல்.
ஆனந்தப்ரசாத்.

  • Arasan Elayathamby வாவ் ! நல்ல கருத்து செறிவான Concept. அதேநேரம் இலகுவான மொழி நடையில் கடினமான விஷத்தை சொல்லிருகிர்ரிங்க ! நீங்கள் எங்கயோ உயர்ந்த இடத்துக்கு போகபோரீங்க கவிஞ்சர் !
  • Vj Yogesh "நியாய வசந்தத்தில்

    தளிர்த்துப் பூப்பது!

    சார்புக்கு முன்பான
    ...See More
  • Rajaji Rajagopalan மதில்மேல் பூனையா வேலிமேல் பூனையா? எல்லாம் ஒன்றுதான். இன்னும் முடிவுக்கு வரவில்லை என்ற நிலையை விளக்குவதற்கு இதைவிடப் மிகப்பொருத்தமான உதாரணம் எதுவுமில்லை. ஆனால் கவிஞர் தலைப்பிலும் படத்திலும் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டார். அடுத்த கட்டம்தான் வலு கஷ்டம்போல் எனக்குத் தோன்றியது. ஒன்றைப்பற்றி முடிவு எடுக்கவேண்டுமானால், விமர்சிக்கவேண்டுமானால் அல்லது சீர்தூக்கிப் பார்க்கவேண்டுமானால் முதலில் நமது சொந்தக் கருத்தையும் கொள்கைகளையும் கழற்றி எறிந்துவிட்டு எம்மை நடு நிலையில் வைத்திருக்கவேண்டும் என்ற அரிய கருத்துக்கு ஆரம்பத்திலேயே தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். இலையுதிர் காலத்து மரங்களை, முக்கியமாக, மேப்பிள் மரங்களை, அவற்றின் அழகுக்கும் உறுதியான நிமிர்ந்த தோற்றத்திற்குமாகவே நான் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் கவிஞரோ அம்மரங்களைத் தனது நடு நிலைக்கு உதாரணமாக நிற்கும்படி அழைக்கிறார். அவை நாலு பருவகாலங்கங்களையும் கண்டு, அறிந்து, உணர்ந்து, கிரகித்து நிற்பதனால் அவை இறுதியில் எக் கருத்தின்மீது சார்புடையதாகின்றதோ அது நிச்சயம் சத்தியத்தின்பாற்பட்டதாகும் என நம்புகிறார். இன்னொரு மனதைக் கவர்ந்த சொற்பிரயோகம்: கொள்கைகளைக் கோவணத்துக்கு ஒப்பிடுகிறார். நடு நிலையில் நிற்க வேண்டுமானால் "முழுவதையும்" துறந்துவிடவேண்டும் என்ற இவரின் முழக்கத்திற்கு என் முழு ஆதரவையும் தருகிறேன். முன்னைய கவிதை கடல் என்றால் இது அதனுள் விளைந்த முத்து.
  • Anand Prasad Arasan Elayathamby ''நீங்கள் எங்கேயோ உயர்ந்த இடத்துக்கு
    போகப்போறீங்க கவிஞரே!''
    நன்றி நண்பரே.....இப்படி என்னை இதுவரை யாரும்
    வாழ்த்தியதில்லை.
  • Anand Prasad Rajaji Rajagopalanநன்றி ராஜாஜி அவர்களே.....எனது வரிகளை
    முழுமையாகவோ அன்றிப் பகுதியாகவோ
    புரிந்துகொண்டு தந்த பொழிப்புரை மனது நிறையவைக்கிறது!
    இந்த இனிய நிறைவோடு இயல் கடந்து
    மறைந்தாலும் போதும்!

    எனினும் இன்னமும் கொஞ்சம்
    எழுத இருக்கிறது....எழுதியபின்பு....
    நன்றிகள்....ஆழ்மனத்திலிருந்து.......!!!!
  • Rajaji Rajagopalan அன்பு Anand Prasad, உங்களின் ஆழ்மனத்திலிருந்த வெளிப்பட்ட நன்றிக்கு மட்டுமல்ல என் சிறிய அறிவுக்கு எட்டாத கற்பனைச் செறிவு உங்களிடம் எவ்வளவுக்கு ஆளமாய் வேரூன்றியிருக்கிறது என்பதை அறிந்தும் பெருமிதமடைகிறேன். நன்றி.
  • Kannathasan Krishnamoorthy 'மேப்பிள்' மரங்களை நான் பார்த்ததில்லை ஆனால் கவிஞரின் உதாரணத்தினால் அவைகளை என் மனக்கண் முன்னே கொண்டு வருகிறேன்...
  • Rajaji Rajagopalan கவிஞர் Anand Prasad அவர்களும் நானும் வாழும் நாட்டில் மேப்பிள் மரங்களே இலையுதிர் காலத்தில் கூடிய அழகோடு தோன்றுகின்றன. கவிஞர் இம்மரத்தையே மனதில்கொண்டு "வெப்பத்தை விளங்கி...குளிரை கிரகித்து..." ஆகிய வரிகளை எழுதிக் கவிதைக்கு உயிரூட்டியிருப்பாரென ஊகித்தேன். ஆனால் அவர் இதனை ஏற்றுக்கொள்வாரோ அறியேன். எனினும், திரு கண்ணதாசன் கிருஷ்ணமூர்த்தி அவர்களே கனடாவின் தேசிய மரமாக இன்று விளங்கும் மேப்பிள் மரத்தில் இலையை நீங்கள் இ ந நாட்டின் தேசியக் கொடியில் அவதானித்திருப்பீர்கள். இப்பொழுது உங்கள் மனக்கண்முன் தோன்றும் மேப்பிள் மரம் இன்னும் முழுமையாயிருக்கும் என நம்புகிறேன். நன்றி.
  • Kannathasan Krishnamoorthy முற்றிலும் உண்மை,உங்கள் முகப்பு அட்டையிலும் அந்த படம் தான் உள்ளது என நினைக்கிறேன்.சரியோ தெரியவில்லை...
  • Rajaji Rajagopalan நீங்கள் பார்த்ததும் புரிந்துகொண்டதும் சரியே. வட அமெரிக்காவில் செப்டம்பர் 22ஆம் திகதியை உத்தியோக பூர்வமான இலையுதிர்கால ஆரம்பதினமாகக் கணித்திருக்கிறார்கள். அன்றிலிருந்து எனது முகப்பு அட்டையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய இலையுதிர் காலப் படத்தை இணைக்கவேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்த ஞாயிறு வரை எங்களூர் வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா நடந்துவந்ததால் அவருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டியதாயிற்று. இனி வரும் நாட்களில் பெரும்பாலும் நான் எடுத்த படங்கள் இடம்பெறும். நன்றி.

No comments:

Post a Comment