Friday, December 7, 2012

தலகாணி...அல்லது பழையதோஷம்.

 




பிடரியில் வழிந்த
வியர்வையும் அழுக்கையும் தவிர....
பிறிதொன்றும் அறியாது
தலையணைக்குள் அகப்பட்ட
பஞ்சுப் பொதிகளாய்......
எஞ்சிய என் நாட்களின்
இறுதி மூச்சுக்கள்
''இப்படித்தான்....இப்படித்தான்.....''
என்று யார் யாராலோ
எப்பொழுதோ நிர்ணயிக்கப்பட்டு
பல மாமாங்கம்
பறந்தோடிப் போயிற்று!
எட்டும் அறிவுக்குள் ஏராள தகவல்களின்
கட்டுமானங்களுக்குள்
கடிவாளத்தினை என்றும்
விட்டகலா குதிரையென
வீரியங்கள் உள்ளவரை
எங்கெங்கோ வாழ்வை இழுத்தோடிய காலம்
இங்கென்னைத் தள்ளிவிட்ட
இறுமாப்பில் ஏகிறது....
தேன் திரண்ட கூடுகளும்...தேனிகளும்
தேய்பிறையும்....
வான்பிளந்த வண்ண மழையும்....
எப்போதும் போல......
நிலவின் பொய்யொழுகும் தண்ணொளியும்.....
ஞாலம் உகந்த ஞாயிறின் வெம்மையும்....
"எப்போதும் போல.....எப்போதும் போல....."
நாள்தோறும் மாறுகிற
நவ உலகின் நியமங்கள்
ஆழ்மனத்தே படிந்தாலும்
அகலாது அதன்கீழே.....
பழக்க தோஷமென்ற பரமசிவப்பாம்பொன்று
துரத்தி துரத்தி....
துப்பாக்கி இல்லாது
விரட்டியடிக்கிறது....
விட்டகல மறுக்கிறது
மீண்டும் தலையணைக்குள்
மிரள்கின்ற பஞ்சானால்
யாண்டும் இடும்பை இல!!!
ஆனந்தபிரசாத்.




  • VJ Yogesh //தேன் திரண்ட கூடுகளும்...தேனிகளும்

    தேய்பிறையும்....

    வான்பிளந்த வண்ண மழையும்....
    ...See More

  • Rajaji Rajagopalan ...//------------------------------------------ஆனந்த் பிரசாத் புதியதோர் பரிணாமம் எடுக்கிறார் போலிருக்கிறது.

    பஞ்சுப் பொதிகளாய்......
    எஞ்சிய என் நாட்களின்
    இறுதி மூச்சுக்கள்..//


    கடிவாளத்தினை என்றும்
    விட்டகலா குதிரையென
    வீரியங்கள் உள்ளவரை..//

    தேன் திரண்ட கூடுகளும்...தேனீக்களும்
    தேய்பிறையும்....
    வான்பிளந்த வண்ண மழையும்..//

    நாள்தோறும் மாறுகிற
    நவ உலகின் நியமங்கள்...//

    ஆழ்மனத்தே படிந்தாலும்
    அகலாது அதன்கீழே...//

    வாசித்து முடிக்கும் வரைக்கும் ஆனந்தை என் மனம்,

    விட்டகல மறுக்கிறது...//

  • Aangarai Bairavi Nalla mozhi aalumai niraindha kavithai.thean niraindha koodu endra vari,vaan pilandha mazhai endra varigal manak karppanaiyei thoondupavai.vazhvin padhivu anna!

  • Subramanian Ravikumar தலையணை பிடறியில் வழியும் வியர்வையும் அழுக்கும் மட்டுமா அறியும்? உங்கள் முகமறியும், மூச்சறியும், நினைவறியும்...

  • George Singarajah நாள் தோறும் மாறுகிற நவ உலகின் நியமங்கள் ...ஆழ்மனத்தே பதிந்தாலும் ..அகலாது அதன் கீழே ..பழக்க தோஷம் எனும் பரமசிவப் பாம்பு ....அருமை ...ஆகா அருமை ..நன்றி

  • Power Ful Brain பழக்க தோஷமென்ற பரமசிவப்பாம்பொன்று
    துரத்தி துரத்தி....
    துப்பாக்கி இல்லாது
    விரட்டியடிக்கிறது. :- வர வர உங்கள் கவிதைகளில் எதோ ஒரு உணர்வு அதிகமாகிக்கொண்டே போகின்றது அண்ணா. உங்கள் மொழியாளுமை என்னை வியக்க வைக்கிறது. மிகவும் ரசித்தேன். உங்கள் உணர்வுகளோடு ஒன்றித்தே விட்டேன்!

  • Emiliyanus Judes நிலவின் பொய்யொழுகும் தண்ணொளியும்.....

    ஞாலம் உகந்த ஞாயிறின் வெம்மையும்....

    "எப்போதும் போல.....எப்போதும் போல

  • Jeyarany Norbert பரமசிவன் பாம்பொன்று துரத்தித் துருத்தி துப்பாக்கி இல்லாது விரட்டியடிக்கிறது.அருமை ,மனதை விட்டகலாத சிந்தனைச் செறிவுகள்.

  • Vanitha Devasigamony எட்டும் அறிவுக்குள் ஏராள தகவல்களின்
    கட்டுமானங்களுக்குள் கடிவாளத்தினை என்றும்
    விட்டகலா குதிரையென வீரியங்கள் உள்ளவரை
    எங்கெங்கோ வாழ்வை இழுத்தோடிய காலம்
    இங்கென்னைத் தள்ளிவிட்ட இறுமாப்பில் ஏகிறது

  • Vanitha Devasigamony படைப்புகள் பிரமாதம் !
    பல தடவைககள் படிக்க வைக்கிறது !
    உங்களை நினைக்கவும் வைக்கிறது !
    நன்றி ஆனந்த் .சகோதரி வனிதா Deva ( France )

  • Thiru Thirukkumaran பிடரியில் வழிந்த
    வியர்வையும் அழுக்கையும் தவிர....
    பிறிதொன்றும் அறியாது
    தலையணைக்குள் அகப்பட்ட
    பஞ்சுப் பொதிகளாய்......

    எஞ்சிய என் நாட்களின்
    இறுதி மூச்சுக்கள்//

  • இடுகாட்டான் இதயமுள்ளவன் மீண்டும் தலையணைக்குள்
    மிரள்கின்ற பஞ்சானால்/////////தலையணை பஞ்சு ....ஒரு அருமையான குறியீடு ஐயா.எத்தனையோ கதைகளை சொல்லும் ஒரு குறியீடு நன்றி பகிர்வுக்கு


No comments:

Post a Comment