Tuesday, November 22, 2011

முலாம் பூசாத வார்த்தைகள்.

 


சன்னம் பாய்ந்த என்

இடதுகாதில் --- ஒலி

சந்தேகப்பட்டது!

சங்கீதமா...... இல்லை

சங்கேத வார்தைகளா?

************

பதின்ம வயதுகளில்

பள்ளி வழக்கொழிந்தேன்.

ஊருக்கும் ஒளித்தேன்

உவந்தேன்...இருப்பழிய.

**************

பால்யத்து நட்பொன்று

கடற்கொள்ளையன் போன்று

மாறுவேடத்தொரு கண்

மறுகித் திரைபோட்டு

பொம்மைத் துப்பாக்கியுடன்

''போஸ்'' கொடுத்த புகைப்படத்தை

அம்மம்மா காட்டினாள்

அகமகிழ்ந்து பேரனுக்காய்

அர்ச்சனைகள் செய்தாள்.

ஐயர் ப்ரசாதங்கள்

அஞ்சலிலே பறந்தது.

பேய்களை ஆற்றுப்படுத்ததும்

பெருவிழவாம் என்றுரைத்தாள்

வாயடைத்துப்போனேன்!!!

வந்ததுவோர் சந்தேகம்?

என் துவக்கு நிஜமா........!?!?

இல்லை.....என நாள்போக...

நன்கு தெரிந்துகொண்டேன்.

நானே நிஜம்........வெறும்

நிஜத்தின் நிழலல்ல.

சப்பரத்தில் நீர் போகும்

சகடைதான் நானென்று

அப்புறமாய்த்தான் உணர்ந்தேன்

அந்தோ..................

யாருக்கோ------நான் இறப்பை

யாசித்தேன்!.......விழல்மரத்தின்

வேருக்கு நீராகி

வீணானதென் வாழ்வு.

ஊனமுற்றூருக்குள்

உயிர்தரித்து உலவவர.....

மானமற்ற துரோகியென

மரியாதை.......! நீர் பெற்றுக்

காவு கொடுத்த உயிர்

கணக்கில்லை..... என்வரையில்

சாவு அதுவாக வந்து

சாகாதது தான் எந்தன் சாபம்!!!







1 comment:

  1. Alexandria Valentine · 3 mutual friends
    Parthiban, is this a poem, or song or both?
    November 20, 2011 at 10:15pm via mobile · Like · 1.



    Parthiban Shanmugam Poetry of genocide!
    November 20, 2011 at 10:28pm · Like · 1.



    மன்னார் அமுதன் nice
    November 20, 2011 at 10:43pm · Unlike · 2.



    Emiliyanus Judes யாருக்கோ------நான் இறப்பை

    யாசித்தேன்!.......விழல்மரத​்தின்

    வேருக்கு நீராகி

    வீணானதென் வாழ்வு.
    November 21, 2011 at 2:21am · Unlike · 1.



    Vj Yogesh என்ன சொல்ல.... no words Sir!!
    November 21, 2011 at 9:24am · Unlike · 1.



    Amalraj Francis Nice.. Congratz..
    November 21, 2011 at 12:04pm · Unlike · 1.



    Kiruba Pillai விழல்மரத்தின்

    வேருக்கு நீராகி

    வீணானதென் வாழ்வு...:(
    November 21, 2011 at 3:59pm · Unlike · 1.



    Sudhakar Pandian அழகான வரிகள்.....அருமை
    November 21, 2011 at 10:19pm · Unlike · 1.



    Pa Sujanthan யாருக்கோ------நான் இறப்பை

    யாசித்தேன்!.......விழல்மரத​்தின்

    வேருக்கு நீராகி

    வீணானதென் வாழ்வு.

    ஊனமுற்றூருக்குள்

    உயிர்தரித்து உலவவர.....

    மானமற்ற துரோகியென

    மரியாதை.......! நீர் பெற்றுக்

    காவு கொடுத்த உயிர்

    கணக்கில்லை..... என்வரையில்

    சாவு அதுவாக வந்து

    சாகாதது தான் எந்தன் சாபம்!
    November 22, 2011 at 2:08am · Unlike · 1.

    ReplyDelete