Sunday, September 22, 2013

அகரம் தொலைந்தவன்

 

 

திருடித்தின்று

பசியாறுகிற சுகங்களை......

காலம்...

எனது காலங்களை

அபகரித்து அனுபவிக்கிறது!

வாழ்க்கை ஒன்றும் வட்டமில்லை

நேர் கோடுதான்

அ....விலிருந்து ஃ......வரை......!

உயிரின் தலையெழுத்து

சமாந்தரக்கோடுகள்

நிரந்தரமில்லை

இறுதிப்புள்ளிவரை இரு கோடுகள்

சேர்ந்திருந்ததாக

வரலாற்றுக் குறிப்புமில்லை

இரத்த உறவுகள்

இரத்தான இழவுகள்

சொந்தம் பந்தம் நட்பு பகை.....

காலாவதியான காசோலைகள்.....

வங்கிக்கணக்கை மூடிவிட்டு

எனது சாம்ராஜ்யத்தில்

முடி சூட்டிக்கொண்டிருக்கிறேன்!!!

இடிபாடுகளுக்குள் இருந்து

புறப்பட்டு வெளியேறியவன்

இன்றும்

கோபுரத்தின் உச்சியில்....

இடிதாங்கியாகத்தான்.

ஃ....ஐ நோக்கி...மெதுவாக.....!
ஆனந்தப்ரசாத்.
 

  • Vanitha Solomon Devasigamony வாழ்க்கை ஒன்றும் வட்டமில்லை

    நேர் கோடுதான்

    அ....விலிருந்து ஃ......வரை......!


    உயிரின் தலையெழுத்து

    சமாந்தரக்கோடுகள்

    நிரந்தரமில்லை

    இறுதிப்புள்ளிவரை இரு கோடுகள்

    சேர்ந்திருந்ததாக

    வரலாற்றுக் குறிப்புமில்லை
  • Thiru Thirukkumaran எனது சாம்ராஜ்யத்தில்

    முடி சூட்டிக்கொண்டிருக்கிறேன்!!!

    இடிபாடுகளுக்குள் இருந்து


    புறப்பட்டு வெளியேறியவன்

    இன்றும்

    கோபுரத்தின் உச்சியில்....

    இடிதாங்கியாகத்தான்.//
  • Pena Manoharan 'காலாவதியான் காசோலைகள்’ கவிப் பொருளாகி இருப்பது புதுமை.’ஃ’ இடிதாங்கிக்கு மிக ஆழத்தில் ‘அ’[டித்தளம்] பலமாக இருப்பதாகவே தோன்றுகின்றது.தமிழ் வையைக் கரையிலிருந்து நல்வாழ்த்துக்கள் ஆனந்த்பிரசாத்.
  • VJ Yogesh Superb... keep on going Anna!
  • Waragunan Nadarajah Super...............
  • Ravi Kathirgamu வாழ்க்கை என்பது ஒரு நேர்கோடு என்ற உண்மைதனை அறியாதவரையில்,காலம் கடந்து ஞானம் வந்தாலும் கண்கெட்டபின் சூரிய நமஐச்காரம் எதற்கு? நிலை இல்லா இவ்வுலகில் வேதனையா , விரக்தியா அன்றி விடுதலையின் வெற்றிக் களிப்பா? வாழ்த்துக்கள் ஆனந்த்.
  • Narayana Moorthy இரத்தான இழவுகள்... ha..ha..haa....
  • Vathiri C Raveendran இறுதிப்புள்ளிவரை இரு கோடுகள்

    சேர்ந்திருந்ததாக

    வரலாற்றுக் குறிப்புமில்லை!//
  • Subramanian Ravikumar ஏனோ இந்தக் கவிதை என்னை ஈர்க்கவில்லை ஆனந்த்.. வாழ்க்கை நேர்க்கோடில்லை... நேர்க்கோடென்று நாம் நினைத்துக் கொள்வது மட்டுமே... அது சுவாரசியமான வளைவு நெளிவுகள் கொண்டது... மர்ம முடிச்சுக்கள் கொண்டது...
  • Kiruba Pillai mee too poet .. thanks for sharing ..
  • Gopaal Naathan இடிபாடுகளுக்குள் இருந்து//
    புறப்பட்டு வெளியேறியவன்//
    இன்றும்//
    கோபுரத்தின் உச்சியில்....
  • George Singarajah நன்றி
    நன்றி
    நன்றி சேர்
  • குழந்தைநிலா ஹேமா நம்மவர்கள் பலரின் வாழ்வுக்குப் பொருந்துகிறது வரிகள்.மனதைத்தொடுகிறது கவிதை !
  • Aangarai Bairavi Pattinathaar mano nilai varigalil.nearkkodu enpadhu nearmai enpadhan kuriyeedaga kondaal maranam varai avan idi thaangidhaan.adavigal niraindhadhudhaan life.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan மனதைத் தொடும் வரிகள் அருமை
  • Rajaji Rajagopalan 0-0-0-0-0-0

    “அ”.விலிருந்து ஆய்தம் வரை
    நிரந்தரமில்லாத தலையெழுத்து...

    வாழ்க்கையொரு காலாவதியான காசோலை!

    தமிழுக்கொரு ஆய்த எழுத்தென்றால் ஆனந்த் அந்த ஆய்தத்தை ஆயுதமாக்குகிறார்!
  •  

No comments:

Post a Comment