Thursday, July 17, 2014

பாதயாத்திரை

 

 


தவழ்ந்த நாளிலிருந்து

ஆரம்பித்தது

கைகள் எப்படியோ

காப்பாற்றிக்கொண்டன

முழங்கால்களும் கூட

பாதங்கள்

தொடர்ந்தன பயணத்தை

மிருதுவாய் அழகாய்

நேர்த்தியாய் கால்விரல்கள்

நேசத்திற்குள்ளார்ந்த

நேசமாய்

என்னை எங்கெல்லாம்

கூட்டிச்சென்றது

நெருஞ்சி முள் நடையின்

வேகத்தை வெறுத்தாலும்

சேற்றுப்புண்

நடை தொடரும்

திசையை சிதைத்தாலும்

கூட்டிச்சென்றன

மாகாணம் விட்டு மாகாணம்

நாடுவிட்டு நாடு

ஒப்பாரி வைக்காமல்

நடத்திச்சென்றன

ஒரு குழந்தையின்

மிருதுவான பாதங்கள்

பூகோளத்தின்

எதோவொரு கரையில்

நிறுத்தி வைத்திருக்கிறது

தேய்ந்து

அழகிழந்து போனாலும்கூட

இதன்மீதுதான்

இன்னமும் நிற்கிறேன் நிமிர்ந்து.

  • VJ Yogesh ''தேய்ந்து அழகிழந்து போனாலும்கூட இதன்மீதுதான் இன்னமும் நிற்கிறேன் நிமிர்ந்து.'' சொந்தக் காலில் நிற்றல்!
  • வளர்மதி சிவா எட்டி அடி வைத்த நாளில் இருந்து தொடர்கின்ற பயணத்தில் வழி நடத்திச் செல்கின்ற பாதங்களுக்கு உங்கள் கவிப்பா சமர்ப்பணம்.
  • Kiruba Pillai பிஞ்சுப்பாதங்கள் ..........என்றும் ..
  • Ravi Kathirgamu தேய்ந்து பொலுவிழந்து சென்றாலும் கூட பூமியின் மீதுதான் இன்னமும் நிற்கின்றேன். தன்னம்பிக்கையும் வைராக்கியமும் தான் ஊன்றுகோல் பாதயாத்திரைக்கு....வாழ்த்துக்கள்.
  • Pena Manoharan கால்முளைத்த போதே நான் கால்பந்து வீரன் என்பதால் ‘கால்களால் நடந்த க[வி]தை கண்டுகட்டுண்டு போனேன் காண்.வையைக் கரை நல்வாழ்த்துகள்.
  • Pena Manoharan ஆகா ஆனந்த் பிரசாத் கலைவாணிக்கு ‘லட்சுமி கடாட்சம்’ கிட்டி இருக்கிறதே.மறுபடியும் நல்வாழ்த்துகள் நண்பரே.
  • Santhiya Thiraviam சார் உங்களோட கவிதைகளை வாசித்து புரிவது கொஞ்ச நேரம் தேவைப்படும் 2 தரம் வசித்தேன் என் மனதை தொடுவிட்டது அருமை அருமை உங்களோட பயணம் தொடரட்டும் எனது வாழ்த்துக்கள் பாராட்டுகள்
  • Santhiya Thiraviam தவழ்ந்த நாளிலிருந்து

    ஆரம்பித்தது பூகோளத்தின்


    எதோவொரு கரையில்

    நிறுத்தி வைத்திருக்கிறது

    தேய்ந்து

    அழகிழந்து போனாலும்கூட

    இதன்மீதுதான்

    இன்னமும் நிற்கிறேன் நிமிர்ந்து.
  • குழந்தைநிலா ஹேமா நிலைப்பாடு .... விரும்பினாலும் மாற்ற வழியற்ற நிலைப்பாடு !
  • Thiru Thirukkumaran இருப்பு
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அருமை சிந்திக்க வைக்கும் வரிகள்
    பயணங்கள் மிருதுவாய் அழகாய்
    ஆனால் பாதங்களோ ..
  • Santha Shanmugam நெருஞ்சி முள் நடையின்

    வேகத்தை வெறுத்தாலும்


    சேற்றுப்புண்

    நடை தொடரும்

    திசையை சிதைத்தாலும்

    கூட்டிச்சென்றன
  • Santha Shanmugam அழகிழந்து போனாலும்கூட

    இதன்மீதுதான்
    ...See More
  • Santha Shanmugam அருமை.
  • Rajaji Rajagopalan பாத யாத்திரை
    மிருதுவான பயணத்தின்
    வேத யாத்திரை,


    திசைகளைச் சிதையவைத்த
    தேச யாத்திரை,

    நெஞ்சத்தை நிமிர்த்திவைக்கும்
    நேச யாத்திரை!
  • Vanitha Solomon Devasigamony தவழ்ந்த நாளிலிருந்து..........பாதயாத்திரை......அருமை!
  • K Shiva Kumar தேய்ந்து அழகிழந்து போனாலும்கூட இதன்மீதுதான்
    இன்னமும் நிற்கிறேன் நிமிர்ந்து அருமை.
  • Jeyakumar Antoni தனிமனித வாழ்வொன்றின் அகப்பிரதிபலிப்புக் (Internal Reflection) கவிதை. முகமடிபடாமல் காப்பாற்றிய கைகள், முழங்கால்கள் எனத் தொடங்கி மிருதுவான பாதங்களை நினைவூட்டி………காலவோட்டத்தில் நொந்து தேய்ந்து, அழகிழந்து போயினும் நிலையாக நிற்கவைத்திருக்கும் உறுதியான பாதங்கள்வழி மனவுறுதியும் இன்னும், நிமிர்ந்து வாழ்வேன் என்னும் எக்காளத் தொனியும் கேட்கிறது !

No comments:

Post a Comment