Thursday, July 17, 2014

முளைபயறு

 

முத்திப்போச்சு என்று

அம்மா கடாசியெறிந்தாள்

வாழைப்பாத்திக்குள்

போய் விழுந்தன

பயற்றம்பழங்கள்

அக்கா

மாலினி பொன்சேகாவின்

ரெக்சோனா

சின்னம்மா

ஸ்ரீதேவியின் லக்ஸ்

நான் தேய்த்துக்குளித்ததோ

லைவ்போய்

இந்த அழுக்குகள்

வாழைப்பாத்தியினூடு

பயணித்தன

முளைவிட எத்தனித்த

முளைகளோ மூச்சுத்தினறின

நான் தப்பிவிட்டேன்

நானொரு லைவ்போய்

ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment