Thursday, July 17, 2014

பதிவு

 


பிரமைகளுக்குள்ளால்

ஊடுபாவி நகர்கிறது வாழ்க்கை

ஒளியோடிணைந்த சமாந்தரக்கோடுகளாய்

கண்களில் தெரியும் காட்சிகள்

தெளிவும் குழப்பமும்

வலிவும் நலிவும்

இருப்பும் இறப்பும்

எதிரெதிரான நிகழ்வுகள்

கரையை எத்தியெறியும் அலைகள்

உள்வாங்கும் வேகத்தில்

நிகழ்வுகள் விழுங்கப்படுகின்றன

ஆழ்மனதில் த்சுனாமியாய்

நினைவு பூகம்பம் மட்டும்

அவ்வப்போதில் தலைகாட்டுகிறது

மூளையை கசக்கி எழுதமுயல்வது

முஷ்டி மைதூனம் செய்வதுபோல

வியப்புக்குறி விடைத்தெழுகிறது

மை தீர்ந்துபோன பேனையின்

எஞ்சிய உதிரத்தையும்

உதறி உதறி பதியமுயன்றாலும்...


Anandaprasad

 
  • George Singarajah அருமை ....அழகான கவிதை ....

  • Kiruba Pillai துயரம் ...? ஆழத்தில் ...தத்துவம் சொல்களில் ...

  • Vanitha Solomon Devasigamony பிரமைகளுக்குள்ளால் ஊடுபாவி நகர்கிறது வாழ்க்கை.......
    ......தெளிவும் குழப்பமும், வலிவும் நலிவும், இருப்பும் இறப்பும்
    எதிரெதிரான நிகழ்வுகள்.....உண்மைகளின், வேதனைகளின..... பதிவு. அருமை!

  • VJ Yogesh //மூளையை கசக்கி எழுதமுயல்வது

    முஷ்டி மைதூனம் செய்வதுபோல


    வியப்புக்குறி விடைத்தெழுகிறது//

  • VJ Yogesh உங்கள் கற்பனைத்திறனைப் பார்த்து மனசுக்குள் எழுகிறது ஒரு வியப்புக்குறி!

  • Subramanian Ravikumar எதுவும் இயல்பாய் எழ வேண்டும்... நல்ல கவிதை ஆனந்த்...

  • Lawrence Vasuthevan பிரமைகளுக்குள்ளால்
    ஊடுபாவி நகர்கிறது வாழ்க்கை


    கரையை எத்தியெறியும் அலைகள்
    உள்வாங்கும் வேகத்தில்
    நிகழ்வுகள் விழுங்கப்படுகின்றன

  • Naavuk Arasan மூளையை கசக்கி கஷ்டப்படாமல் , எழுதுவதுக்கு நிறைய விசியங்கள் எங்களை சுற்றியே நடக்குது ,,நிண்டு நிதானமா நிமிர்ந்து பார்த்து ரசித்து எழுத நேரமில்லாமல் வாழ்கை நேரத்தை விழுங்குது.. ...

  • Ponniah Karunaharamoorthy ஒரு விதை முளைப்பதைப்போல பிரயத்தனம் எதுவுமின்றி கவிதை இயல்பாய் அனுபவங்களூடே எழும்பி வரும். ஆனந்துக்கு அப்படி வருகிறது. அருமையான பதிவு.

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..முஷ்டி மைதூனம் செய்வதுபோல.." நான் மறந்திருந்த சொற்கோர்வை. ஞாபகமூட்டியதற்கு நன்றி. கவிதை அருமை

  • Rajaji Rajagopalan மூளையை கசக்கி எழுதமுயல்வது

    முஷ்டி மைதூனம் செய்வதுபோல..// மிகத் துணிகரமான சொல்லாடல், வரவேற்கிறேன்.

  • Kalaimahel Hidaya Risvi · 38 mutual friends
    கவித் துளிகளின் வசத்தை நுகர முடிந்தது.,வாசனைபிரமாதம் வாழ்த்துக்கள்


  • Anand Prasad



No comments:

Post a Comment