Thursday, July 17, 2014

டிக்...டிக்...டிக்...!

 

 

நிழல் மரங்களின் கீழே
நிமிஷங்களின் கணிப்பு
எப்போதுமே தவறானவை
தாலாட்டின் குளிர்ச்சியில்
காலக்கடிகாரம்
உணர்ச்சிவசப்படத்தான் செய்கிறது
எப்படித்தான் விமர்சிப்பது
வினாடிமுள்ளின்
இதயத்துடிப்புத்தான்
நிமிஷங்களிலிருந்து யுகங்களை
நகர்த்திக்கொண்டிருக்கிறதே
அன்றாடத் தகிப்பில்
பெண்டூலம்
இயக்கத்தை மறுதலிக்கிறது
ஆனந்தபிரசாத்

No comments:

Post a Comment