மேகங்கள் கலைந்து போன
ஒரு மாலையில்......
கைத்தடியில்லாத பிறைநிலவை
காண நேர்ந்தது
நிறைமாத சந்திரனை.......
நித்ய கர்ப்பிணியாய்
பார்த்திருந்த மாதங்கள்!
சில தவளைகளுக்கு
கிணறுதான் எல்லை
குளம்....ஆறு....கடலென.....
விரியும் குணங்களொன்றும்
வாய்த்ததில்லை....
மழைக்கால கூச்சல்களும்
நிலாக்கால பாய்ச்சல்களும்.....
பாசி அடர்ந்திருந்த கிணற்றுக்குள்
சிருஷ்டிக்கப்பட்டிருந்த சிற்றூர்
மீன்கள் நீந்தின....அவ்வப்போதில்
சிறு நண்டுக்குஞ்சுகளும்...
வந்தும்....போயின
நாங்களும் ஒன்றாயிருந்தோம்
யாரெல்லாமோ
துலாக்கோல் போட்டு
ஓட்டை வாளியால்
நீர் இறைத்துக்கொண்டேயிருந்தார்கள்
சொட்டிய நீரினால்
இன்னமும் எங்களுக்கோர் வாழ்வு.
ஆனந்த பிரசாத்
No comments:
Post a Comment