தார்களை
வெட்டிப்புதைத்துக்கொண்டிருந்தார்கள்.....
நானும்...சூட்டியும்
இந்த இரும்புநிறத்து மனிதர்களையே
அண்ணாந்து பார்த்து வியந்தோம்....!
எனது பொத்தான் இல்லாத
அரைக்காற்சட்டை நழுவி விழுந்தது
சூட்டிக்கு நக்கல் தாங்கவில்லை...
''வாழைக்காய்....வாழைக்காய்''.....என்று
ஊளையிட்டான்....சீ....
ஒடிப்பிடித்தும்
ஒளித்துப்பிடித்தும்
கண்களுக்கெட்டிய தூரம்வரை....
வாழை...வாழை...வாழைகளே.
இரும்பு மனிதனிடம்
பயபக்தியுடன் விசாரித்தேன்....
வாழைகளை வெட்டுவதையும்...
தார்களைப்புதைப்பது பற்றியும்...
''இது...இறப்பு.....பிறப்பு....விதி......தளிர்ப்பு....
நாங்கள் பனைமரங்கள்....குருத்துகள்....
உமல் கொட்டைகள்.....''
பதிலைக்கேட்டு விளங்கிக்கொள்ள
அவகாசமில்லாமல்....
சூட்டி என்னை
இழுத்துக்கொண்டோடினான்....
இன்னொரு புதினம காட்ட.....
நத்தையொன்று
வீட்டை சுமந்து
ஊர்ந்துகொண்டிருந்தது.
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment