
இன்னமும் ஒரு வெள்ளாப்புக்காக.....
இந்த நடுநிசியில்
எழுதுகிற தாள்களின்மேல்...
கண்ணீரின் திவலைகள்தான்
காய்ந்து கறையானது....
தாள்களை அழுக்காக்குவது
நான்தான்.
காகிதங்கள் ஒருபோதும்
என்னைக் கடிந்ததில்லை
ஒன்பது ரசங்களை
கொட்டித்தீர்த்தாலும்
அடிப்பெட்டிக்குள்ளோ....
எங்கேயோ வீட்டின் இடுக்கிலோ...
பதுங்கிக்கிடக்கும்.......
நாட்காட்டியின்
கிழிந்த தாள்களல்ல அவை
வெள்ளை வெளேரென்று முதலிலும்
பழுப்படைந்து....மூப்பிலும்....
நிறங்கள் எவ்வாறு மாறினும்
எழுத்து சாவதில்லை.
ஆனந்தபிரசாத்
No comments:
Post a Comment