Wednesday, October 24, 2012

அத்வைதம்

 



செத்துப்போன எனது கவிதைகளை
சீண்டிப்பார்த்தது என் குட்டிப்பூனை!
திமிர்ந்து கிடந்த ஓர்
காலத்தின் சொற்கள் த்ரவித்துப்போயின
திண்ணிய என் உடல்
நிமிர்ந்து இருந்த நேரங்களெல்லாம்
அவகாசமில்லாதிருந்த நான்
அதிர்ந்துபோனேன்.....
வினாடிமுள் குத்தித்தெறித்த
குருதியழுத்தத்தால்.......
தடவுதலை வேண்டியோ
தண்ணீர் தாகம் தணிக்கவோ
தட்டில் கொறிசாதனங்கள்
தீர்ந்து போன கணங்களிலோ.....
என் கண்களுக்குள் பார்த்து
நேராய்க்கேட்கும்
என் வாழ்வின் இந்த நிமிடம்வரை
ஆயிரமாயிரம் ஜோடிக்கண்களை
பார்த்துவிட்டேன்.....
கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவைகள்
கைவிரல் எண்ணிக்கையில்
உயிரை ஊடறுக்கும்
நேத்திரங்களின் நேர்கோட்டில்
நிதர்சனங்கள் துலக்கமானது
கள்ளத்தின் கலப்பில்லாதது
பாஷைகள் பலியாகிய
பவித்ரமான வேளையது
தூங்குவதும் எழுவதும்
தூங்காமல் தூங்குவதும்...
அவ்வளவில் ஆனதே அமைதி.
ஆனந்தப்ரசாத்.




  • Thiru Thirukkumaran தூங்குவதும் எழுவதும்
    தூங்காமல் தூங்குவதும்...
    அவ்வளவில் ஆனதே அமைதி.//

  • George Singarajah உங்கள் கவிதையை காத்திருந்து படித்தாலும் அது பாயசம் போல இனிக்கிறது ...நன்றி நண்பரே .

  • Solomon Vanitha Devasigamony சகோதரர் ஆனந்தப்ரசாத், நீங்கள் எழுதும்
    அருமையான கவிதை வரிகளை
    படிக்கும் வாய்ப்பு, அண்மையிலிருந்து
    எனக்கும் கிடைத்துள்ளது .
    மகிழ்ச்சி கலந்த நன்றிகள்!

    அத்வைதம் அருமை!அருமை!!

    கண்களுக்குள் உடுருவிப் பார்த்தவைகள்
    கைவிரல் எண்ணிக்கையில்
    உயிரை ஊடறுக்கும்
    நேத்திரங்களின் நேர் கோட்டில்
    நிதர்சனங்கள் துலக்கமானது
    கள்ளத்தின் கலப்பில்லாதது...

  • Vj Yogesh "நேத்திரங்களின் நேர்கோட்டில்

    நிதர்சனங்கள் துலக்கமானது

    கள்ளத்தின் கலப்பில்லாதது


    பாஷைகள் பலியாகிய

    பவித்ரமான வேளையது"

  • Rajaji Rajagopalan ----------------------------
    என் வாழ்வின் இந்த நிமிடம்வரை
    ஆயிரமாயிரம் ஜோடிக்கண்களை
    பார்த்துவிட்டேன்.....

    கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவைகள்

    கைவிரல் எண்ணிக்கையில்
    உயிரை ஊடறுக்கும்
    நேத்திரங்களின் நேர்கோட்டில்
    நிதர்சனங்கள் துலக்கமானது

    கள்ளத்தின் கலப்பில்லாதது

    பாஷைகள் பலியாகிய
    பவித்ரமான வேளையது

    தூங்குவதும் எழுவதும்
    தூங்காமல் தூங்குவதும்...

    அவ்வளவில் ஆனதே அமைதி.
    .......................
    ஆத்மாதான் இங்கே குட்டிப் பூனையானதோ,
    கிடைத்தையெல்லாம் கிழித்துக் கிழித்துத் தேடியபின்
    கிடைத்தது கள்ளக் கலப்பில்லாத அமைதி!

    .................

    கவிஞர் தன்னையும் வருத்தி வாசிக்கும் என்னையும் வருத்தினார்.

  • Arasan Elayathamby தூங்குவதும் எழுவதும்,தூங்காமல் தூங்குவதும்...அவ்வளவில் ஆனதே
    வாழ்க்கை ! "த்ரவித்துப்போயின". " நேத்திரங்களின்" என்ற இரண்டு வார்த்தைகளுக்கும் எனக்கு அர்த்தம் விளங்கவில்லை. அப்புறம் இந்த கவிதையின் சில வரிகளை என்னோட சுவரில வெட்டி ஓட்டலாமுன்களா?

  • Anand Prasad Arasan Elayathamby ''த்ரவித்துப்போதல்'' என்றசொல் அழுகி நீர்த்துப்போன....
    அல்லது உழுத்துப்போன...ஆனால் காய்ந்துபோனதல்ல. Undergo
    decomposition, deteriorate or to rot.
    ''நேத்திரங்கள்'' ......கண்கள்.....நயனங்கள்.!!!
    தாரளமாக....ஆனால் சொல்லவந்த கருத்தை சொதப்பாமல்.
    நன்றி நண்பரே....என் வரிகள் பிடித்துப்போய் விட்டதென நினைக்கிறேன்....மகிழ்ச்சியே.

No comments:

Post a Comment