Wednesday, October 24, 2012

துரும்பு

 

 


கரித்துண்டுக்கும்
கற்சுவருக்கும் உள்ள
சம்பந்தம்
காகிதத்திற்குள்
குறுகிப்போனதை
விச்வரூபமெடுக்க வைத்தது
மனசுக்குள்
மறுகிக்கொண்டிருந்ததை
பிரமாண்டமாக்கியது
கண்ணீரை
பளிங்காக்கியது.
பல்குத்துவதற்கு
மட்டுமல்ல.......
இரும்புகளை
இளக்கவும் கூட....!
ஆனந்தப்ரசாத்




  • Vj Yogesh "பல்குத்துவதற்கு

    மட்டுமல்ல.......

    இரும்புகளை
    ...See More

  • Rajaji Rajagopalan ஒரு சிறு துரும்பு எங்களுக்குப் பல்குத்துவதற்கும் பயன்படும், ஆனால் அது

    விச்வரூபமெடுக்க வைக்கும்
    பிரமாண்டமாக்கும்
    பளிங்காக்கும்

    இரும்புகளை இளகவைக்கும்

    ஆகவே எதையும் சிறு துரும்பு என ஒதுக்காதீர்கள்.

    ஒரு நல்ல கவிதைக்கு கன்னியர்கள் மட்டும்தான் கருவாகவேண்டுமென்பதில்லை. துரும்புகூட..

    நன்றி, ஆனந்தம் தரும் பிரசாத்



No comments:

Post a Comment