Wednesday, October 10, 2012

சாளரம்

சாளரம்



காற்று முதற்கொண்டு
கருத்து வரையிலாக
தந்துகொண்டிருக்கிறது
கடன்காரனை கூட
காட்டிக்கொடுக்கிறது
எனது
சீரான வெப்பநிலைக்காக
இயற்கையோடு
சமரசம் செய்து கொண்டு
உடன்பாடும் எதிர்மறையுமாக
உள்ளுக்குள் தகிப்பும்
வெளிக்கு உறைபனியுமாய்.....
தாய்க்கோழியின்
சிறகுகளைப்போல......
பிரபஞ்சத்தை
பிடித்துக்கொண்டு வந்து
எனக்குஅறிமுகப்படுத்துகிறது
உட்கார்ந்தால் வானம்
எழுந்தால் பூமி
எனது சாளரத்தின் வழியாக
உலகம்
என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறது!
ஆனந்தப்ரசாத்.




  • George Singarajah Every words in this poem so wonderfull. It's very nice poem. So nice.

  • Vj Yogesh "உள்ளுக்குள் தகிப்பும்

    வெளிக்கு உறைபனியுமாய்....." உங்கள் சாளரத்தின் வழி உங்களைப்பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்...புரிந்தும் புரியாத ஒரு பிரபஞ்சம் உங்களிடமும் உண்டு!

  • Rajaji Rajagopalan இம்மாபெரும் கவிதைச் சாம்ராஜ்ஜத்தில் நானொரு சிப்பாய்போல. இதனால் இந்த இளவரசன் என்ன "மூட்டில்" இருக்கிறார், என்ன சொல்கிறார் என்பதை முழுவதும் விளங்கிக்கொள்ளமுடியாதிருக்கிறது. எனினும், சாளரத்தின் வழியாக உலகம் இந்த இளவரசனைப் பார்த்துக்கொண்டிருப்பது ஏனென்பதை மட்டும் அறிவேன். இவரின் முடிசூட்டுவிழா விரைவில் வரப்போகிறதல்லவா? அதனால்தான்.

  • Thiru Thirukkumaran உட்கார்ந்தால் வானம்
    எழுந்தால் பூமி
    எனது சாளரத்தின் வழியாக
    உலகம்
    என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறது!//

  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan நன்றாக இருக்கிறது "உட்கார்ந்தால் வானம்
    எழுந்தால் பூமி
    எனது சாளரத்தின் வழியாக.."

  • Rajaji Rajagopalan அடியேனை இவர் ஆளெளிப்பிச் சொதியாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் பெரிய கூட்டத்தில் தலை காட்டியாகிவிட்டது. இனி இறுதியில் இவரின் சாளரந்தின்வழியாக வந்து உள்ளே என்ன நடக்கிறது எனப் பார்ப்பேன். நன்றி

  • Anand Prasad Rajaji Rajagopalanஐயா, நீங்கள் வெறுமனே ''ஆள் எழுப்பிச் சொதி'' அல்ல.
    ஆள் (படைப்பாளியின்) எழுச்சி ஸ்ருதி! தாங்களும் கருத்துப்பகிர்ந்த
    அனைத்து நண்பர்களும் என்மீதான வாசிப்பையும், நேசிப்பையும்
    முகனூல் வழியாக வெளிப்படுத்துவது அனுபவமாகையில்.......
    கண்களில் நீ
    ர் பனிக்க எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.
    எனது சாளரம் ஒரு திறந்த புத்தகம்.....எனது கருத்துக்களோடு
    நீங்களும் உங்கள் கருத்துக்களோடு நானும் உடன்பாடோ,
    எதிர்மறையோ.......மல்லுக்கு நிற்கமாட்டேன்!!! ஏனெனில்
    நட்பில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
    எனது சாளரம் திறந்திருந்தால் காற்றூடோ அன்றி கூதிர்காலத்தே
    அடைத்திருந்தால் திரைமறைப்பில்லா அதனூடுபாவும் கதிரின்
    கீற்றூடோ என்னைப்பார்க்கலாம். நன்றி நண்பர்களே.

  • Rajaji Rajagopalan முதல் கவிதையையே இன்னும் வாசித்து விளங்கிக்கொண்டபாடில்லை அதற்குள் இரண்டாவது கவிதையையும் அனுப்பி எனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கத் தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது. என்றபோதிலும் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தச் சாளரத்தைத் திறந்தபடி வைத்திருங்கள். கவிஞரே. உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் உங்களுக்கு அடியாட்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது உங்கள் கதவைத் தட்டுவார்கள் அல்லது எப்போது நீங்கள் அவர்கள் கதவுகளைத் தட்டுவீர்களெனச் சொல்லமுடியாது. ஏனெனில் நாமெல்லாரும் நண்பர்கள். அதனால்தான் நான் துணிந்து இப்படியெல்லாம் எழுதுகிறேன். நீங்களும் பொறுத்துக்கொண்டு பதில் எழுதுகிறீர்கள். வளரட்டும் நட்பும் நற்பணிகளும்.

  • Anand Prasad Rajaji Rajagopalan''அடி''யாட்களா??? சரி...சரி....நான் எதற்கும் துணிந்தவன்தான்!
    வாதாட நீங்களிருக்கும்போது சட்டம் எனை என்ன செய்யும்?
    உற்சாக ஊக்குவிப்புக்கும், அங்கதச்சுவை ததும்பும் வார்த்தைகளுக்கும், இவற்றுக்கும் மேலாக இனிய நட்புக்கும்.......
    என்ன சொல்ல.......நன்றிகளைத்தவிர?

  • Rajaji Rajagopalan இது கோயில்களில் ஐயர் உள்ளங்கைகளில் திணிக்கும் கல்லும் தேங்காய் நாரும் கலந்த பிரசாதமல்ல; ஆனந்தத்தில் குழைத்தெடுத்த பிரசாதம். வாருங்கள் நண்பர்களே, இவரின் கவிதைத் தொகுதியைக் கனடாவிலும் கொழும்பிலும் ஒரே நாளில் வெளியிடுவோம்.

No comments:

Post a Comment