Monday, November 12, 2012

முதலாம் பிறை

 


அடர்ந்த இருளின் செறிவில்
ஆகத மனிதர்களின்
கைகள் தடவித் தேடியதென்னவோ....
கண்ணிமைகள் மூட....
துலங்கும்
ககனத்து மின்மினிகளையே....
அவளோ....
குமிட்டியடுப்பை மூட்டினாள்
தீ.....சுவறிய வெளிச்சத்தில்
முகத்திரை விலக்கி
தேட முற்பட்டதென்னவோ....
அறிவை மட்டுமே!
இருப்பிற்கு இன்னமும்
ஏராளமாய்.....திகதிகளிருந்தன!
ஒரு இருண்டுபோன பகலில்...
நாளதுவரை தேடியது
இவளை
விடிவெள்ளியாக்கியது.
இன்ஷா அல்லாஹ்!
ஆனந்தபிரசாத்.


No comments:

Post a Comment