Tuesday, September 4, 2012

கவிதை





அறிவை
எழுதித் தரும்படி கேட்டேன்
தந்தது......
அசட்டுத்தனமாக இருந்தது
அனுபவத்தை
எழுதித் தரும்படி கேட்டேன்
அருவருப்பாக இருந்தது
மனசை எழுதச் சொன்னால்
'மூட்' இல்லை என்று
மறுத்து விட்டது
ஆத்மாவிடம் வேண்டினேன்...
என்னைக்கொண்டே
எழுதுவித்து
மொழியிடம்
சேர்ப்பித்து விட்டது.
ஆனந்தபிரசாத்.
Photo courtesy from
Sureshwaran Koothuppatarai.
 


    • Giritharan Navaratnam
      ஆனந்த பிரசாத்தின் இந்தக் கவிதையை வாசித்தபொழுது எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது 'மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை' என்ற வரிகள்தாம். மர யானையை யானையாகப் பார்த்தபொழுது அது மரமாகத் தெரியவில்லை. யானையாகத்தான் தெரிந்தது. அத...
      னை மரமாகப் பார்த்தபொழுது மாமதயானை மரமாகத் தெரிந்தது. அதுபோல்தான் அசட்டுத்தனமாக, அருவருப்பாகவெல்லாம் தெரிவதும். இங்கு கவிஞர் அறிவை, மனதை, ஆத்மாவைக் கேட்கின்றார் எழுதித்தரும்படி. அறிவை, அனுபவத்தை எல்லாம் உணர்வது எதுவென்றால் அது மனம். மெய்ஞ்ஞானத்தின்படி அந்த மனமென்பது ஆத்மா. அதன்படி உணமையில் இவையெல்லாமே ஒன்றின் வேறுபட்ட நிலைகள்தாம். மானுடத்தின் வளர்ச்சிப்படியில் மனமானது அனுபங்கள் வாயிலாகப் பெறும் அறிவு, புரிதலெல்லாம் எளிமையிலிருந்து தெளிவு நோக்கிப் பரிணாம வளர்ச்சியடைந்துகொண்டு சென்றாலும், அவையெல்லாமே மனதின் வளர்ச்சிப்படிகள்தாம். உளவியலின்படி எமது மனமானது நனவு மனம், நனவிலி மனமென்றெல்லாம் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. அனுபவங்கள் (வாசித்தல், வாழ்தலுட்பட அனைத்து மானுடச் செயல்களும்) , அவற்றின் விளைவாக அடையும் அறிவெல்லாம் மானுடத்தின் வெவ்வேறு வளர்ச்சிப் படிக்கட்டுகளில் வேறுபட்டிருந்தால் காரணம் அவை வளர்ச்சியின் அறிகுறிகள். எனது 'மனிதரின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்' என்னும் கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்துள்ளேன்:

      'இவ்வாறு மனிதரைப் பல வழிகளிலும் ஆட்டிப்படைக்கும் இம் மனதினை மனோவியல் அறிஞரான சிக்மண்ட் பிராய்ட் இரு பகுதிகளாகப் பிரிக்கின்றார்.

      1. உணர்வு மனம் (அல்லது புற மனம்)
      2. உணர்விற்கப்பாற்பட்ட மனம் (அல்லது ஆழ் மனம்)

      மனிதரின் மனதின் முக்காற் பங்கினை உள்ளடக்கியிருப்பது இந்த உணர்ச்சிக்கப்பாற்பட்ட ஆழ் மனமே. சகல விதமான அபிலாஷைகள், எதிர்பார்ப்புகளைப் புதைத்து வைத்துள்ளது. இந்த ஆழ்மனம்தான் மனிதரது சகல விதமான பிரச்னைகளிற்கும் காரணம். பகுத்தறிவு பேசுவது மனிதரின் உணர்வு மனம். ஆனால் அவரது உணர்விற்கப்பாற்பட்ட மனமான ஆழ்மனதினிலே அவர் பேசும் பகுத்தறிவிற்கேற்ற கொள்கைகள், எண்ணங்கள் பதிந்திராவிட்டால்..அவர் எவ்வளவு பகுத்தறிவு வாதம் புரிந்தும் பயனில்லை.'

      மேலுள்ள கவிதையில் 'அறிவு', 'அனுபவம்' எல்லாம் பகுத்தறிவு பேசும் மனிதர் அடைந்த புரிதலாகவே நான் கருதுகின்றேன். அனுபவமென்பது அடைந்த அனுபவங்கள் விளைவாகக் கவிஞர் பெற்ற அனுபவ அறிவு. ஆக, அவர் அறிவு என்பதும், அனுபவமென்பதும் ஒன்றையே தனது வாழ்வியல் செயற்பாடுகளினூடாக அவர் உணர்ந்த, அடைந்த புரிதலையே என்றும் தர்க்கரீதியாகக் கருதலாம். அவர் ஆத்மாவென்று கருதுவதை அவரை இரவும், பகலும், தூங்கும் போதும், விழித்திருக்கும்போதும் நடாத்திச் செல்லும் ஆழ்மனமாகவும் கருதலாம். அதனால்தான் புறமனதை ஒழுங்குபடுத்தி ஆழ்மனமென்னும் முரட்டுக் குதிரையினை அடக்கிவிட்டால் எதனையும் சாதிக்கலாமென்று உளவியலாளர்கள் கூறுவார்கள்.

      இதனால் கவிஞர் தன் புறமனதிடம் (அறிவு, அனுபவம்) கேட்டபோது அசட்டுத்தனமாகவும், அருவருப்பாகவும் அவை வெளிப்படுத்திய எழுத்தானது அவர் தன் ஆழ்மனதிடம் (ஆத்மா) கேட்டபோது அவரைக் கொண்டே எழுதி மொழியிடம் அவரைச் சேர்ப்பித்து விடுகிறது. இதன் மூலம் கவிஞர் தன் ஆழ்மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறாரென்று படுகிறது. வாழ்த்துகள்.
      See More

      August 22 at 11:12pm · Edited · · 4

    • George Singarajah மனசை எழுதச் சொன்னால் மூட் இல்லை என்று மறுத்து விட்டது ......மிகவும் பிடிக்கிறது இந்தக் கவிதை .....
      August 23 at 9:15am · · 1

    • Vj Yogesh
      ‎"ஆத்மாவிடம் வேண்டினேன்...

      என்னைக்கொண்டே

      எழுதுவித்து
      ...

      மொழியிடம்

      சேர்ப்பித்து விட்டது." நிச்சயமாய்.... ஆத்மாவிலிருந்து வருவது தான் உண்மையான கவிதை!
      See More

      August 23 at 10:22am · · 3

    • Jegatheesan Subramaniam ஆத்மார்த்தமான கவிதை
      சகல கவிஞருக்கும்.
      August 23 at 9:59pm · · 1

    • Arasan Elayathamby ‎"மூட்" இல்லை என்பதை "அந்த மனநிலையில் இல்ல" என்று தமிழில் எழதலாம? இந்த அழகாண கவிதயில் ஆங்கில வார்த்தை பிரயோகம் எங்கோ உதைகிறது , கவிதையின் உயர்ந்த ததுவார்த் நிலையில் இருந்து இன்றன்கிவர செய்கிறது என்பது என்னோட அபிபிராயம் !
      August 28 at 8:10am · · 1

    • Rajaji Rajagopalan
      அறிவு அசட்டுத்தனமாகவும் அனுபவம் அருவருப்பாகவும் மனம் சம்மதமில்லாமலும் ஆத்மா மொத்தத்தில் இவரேயாகவும்... கவிஞர் தன்னைப்பற்றி மனம் திறந்து சொல்லியிருக்கிறார். இது சங்க காலப் பாடல் அல்ல; இன்றைய உலகின் இன்றைய பிரதிநிதியின் மனோ நிலை. அதை என்ன ம...
      ொழியில் சொல்கிறார் என்பது மிக்கியமில்லை; என்ன சொல்கிறார் என்பதுதான் முக்கியம். இம்மனமயக்கக் கவிதைக்கு ஒரு தலைப்புக் கொடுத்திருப்பாராயின் நாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பற்றி இவ்வளவுக்கு மல்லுக்கு நிற்கவேண்டிய தேவை வந்திருக்காது.
      See More

      8 hours ago · · 2


  •  




No comments:

Post a Comment