பயணம்
இருட்டுக்கும் நிழலுக்கும்
இருக்கிற சம்பந்தத்தை
தெரிந்துகொண்டேன்.....
இந்த வாழ்வு
இருண்டு கிடக்கிறது
வாழ்வின் நிழலாக
இருத்தல் தெரிகிறது
இருளில் நிழலைத்தேடுவது கூட
ஒரு சுஹானுபவம்தான்!
இந்த அகதி வாழ்வு
தற்காலிக நிழல்களை
தேசம்..... தேசமாக
தெளித்துக்கொண்டு போகிறது...
உடம்போடு சேர்ந்த
அழுக்கைப் போல....
இருள் ஒட்டிக்கொண்டிருக்கிறது
ஆசைதீரப் புணர்ந்தவனுமில்லை
அழுக்குப்போக குளித்தவனுமில்லை!!!
சிருஷ்டிகளை மறந்து
கூத்தடிக்கும்
இருளையும் நிழலையும்
உதறித்தள்ளி விட்டு
அந்தப்பெரிய வெளிச்சத்தில்
கரைந்து போவதற்காய்......
பல்லை கடித்தபடி.......
ஆனந்தப்ரசாத்.
- Mathi Vathanam, Balan Tholar, Sudhakar Pandian and 20 others like this.
- Pr Rajan அந்தப்பெரிய வெளிச்சத்தில்
கரைந்து போவதற்காய்... you can merge to the deep dark shadows as well! good poem! - Rajaji Rajagopalan இந்த அழுக்கு நிறைந்த இருட்டறையில் இக்கவிதையை எழுதினவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இருட்டில்போய் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியுமா? முடியும். ஏனென்றால் அவன் மிகப் பொறுமைசாலி, எப்படியும் ஒரு நாள் ஒளியைக் கண்டுவிடுவான் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறான். அந்த ஒளி வெள்ளம் வரும்போது வெளியில் வந்து கூத்தடிக்கப்போகும் அவனையும் அவன் நிழலையும் ஒருங்கே காணும்போது அவன் கவலைகள் எல்லாம் ஒழிந்துபோயின என்றும் சுதந்திரமான வாழ்வு இறுதியில் வந்து சேர்ந்தது என்றும் நானும் அவனோடு சேர்ந்து மகிழ்வேன்.
- Pena Manoharan "Intha agathi vaazhvu..." varikalil ulla vali aanmaavai azhavaikkirathu.arumai.vaazhththukkal.Vaigaikarai Vaasangaludanum Naesangaludanum.
- Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அற்புதமாகச் சொன்னீர்கள். "தேசம்..... தேசமாக
தெளித்துக்கொண்டு போகிறது...
உடம்போடு சேர்ந்த
அழுக்கைப் போல...."
No comments:
Post a Comment