Sunday, September 23, 2012

மாதத்துவம்

மாதத்துவம்




மாங்கொட்டைக்குள்
ஒரு
சிதம்பர ரகஸ்யம்!
கறுப்பென்றும் வெளுப்பென்றும்
கருவிலேயே நிறபேதம்
கடை...சீ...வரைக்கும்
சுரண்டித்துப்பினோம்.
கறுத்தக் கொளும்பானும்
வெள்ளைக் கொளும்பானும்
பொறுத்த யாழ்ப்பாணத்தே
பொலிந்து செழித்தன
பிரதேச வாதம்
பொடிப்பொடியானது
பிறதேசங்களுக்கும்
செறிந்து பரந்தது
ஆசியாவில் இருந்து
அவுஸ்திரேலியாவில் வெந்து
ஐரோப்பாவில் நொந்து
அமேரிக்காவில் குளிர்ந்து
தோலும் பறிபோய்
சுளையும் சூறையாடப்பட்டு.....
விதைக்கு முளைக்கும்
ப்ராப்தமில்லை
நாங்கள்
கொட்டைகளை
நேசிப்போம்
என்றைக்கேனும்
உரிய மண்ணில்
உயிர்க்கும்.... தானே!
ஆனந்தபிரசாத்.
*ஒளிப்படங்கள் உதவி
கவிஞர் யோகேஷ் யாழ்ப்பாணத்திலிருந்து.




 

No comments:

Post a Comment