நிலவுக்கு அவ்வளவு
வெளிச்சமில்லை
''சூரியபகவான் எள்ளுப்போல
தெளித்ததை வைத்துக்கொண்டு
மாதமொருமுறை
இந்தக்கூத்தடிக்கிறது......''
பாட்டி சொன்னாள்
இருட்டில் வாழ்வது
இயல்பேயாம்
பலவிதத்திலும் நன்மையேயென்று
பாலம்போட்ட ஆற்றுக்கு
போகும் வழியெங்கும்
சிதிலமாகிக்கிடந்தன பாதை
நள்ளிரவில்
சொரிந்து தள்ளின பாலைப்பழங்கள்
கனரக வாகனங்கள்
மிகமெதுவாக ஊர்ந்தன
''ஒட்டுப்போட்ட கொட்டிலுக்குள்
வெட்டவெளிச்சம் வேண்டாமடி விசாலி......''
பாட்டியின் பாட்டின்
அலுப்பூட்டும் பல்லவி
தார்ச்சாலையின் கரையோரம்
காதைவைத்துக்கொண்டிருந்தாள்
''உஷ்.....'' என்று
தம்பிக்கும் எச்சரித்தபடி
எப்படியோ
வெடித்துக்கிடந்த நெடுஞ்சாலை
தன்னை செப்பனிட்டுக்கொண்டது.
ஆனந்த் பிரசாத்
No comments:
Post a Comment