Tuesday, November 18, 2014

நடப்பு

 
 

வழமையேயான
நடைப்பயிற்சி
நேர்சீரான உப பாதையால்
சப்பாத்து அணிந்துகொண்டு
குளிர் விட்டுப்போயிற்று
இடதுபுறம் திரும்பி
பசும்புல் வெளியில்
வெறும் பாதங்களோடு நடந்தேன்...
சுருக்கென்று முள் தைத்தது
விடுதலைக்காக
குரல் எழுப்பினேன்

ஆனந்தப்ரசாத் 

No comments:

Post a Comment