வழமையே போல்
வெளிறிப்போன வானம்
கிழக்கின் விளிம்பில்
மூழ்கிப்போன கடலிலிருந்து
மூச்செடுக்க
பூங்கொத்துகளின் இடுக்குகளினூடே
பொன்னுருக்கி தெளித்தது
எல்லாமும் சிறுமைப்பட்டு
சுருங்கியதாய் கருதப்படும்
காலகாலமான இரவுகள்
தற்காலிகமான தீர்வுகளில் அமுங்கின
இருள் நன்கறியும்
பகலின் வேஷங்களை
காலையும் மாலையும்
கடக்கும் நிறப்பிரிகைகளை
மனிதர்கள் விலங்குகள்
விலங்குகள் மனிதர்கள்
மரணங்கள் பிறப்புகள்
பிறப்புகள் மரணங்கள்
இருப்புகள் இறப்புகள்
இருப்பினுள் இறப்புகள்
வெளிச்சத்திற்கும் வெறுத்துப்போய்
சேவல்கள் இப்போது
அதிர்ந்து கூவுவதில்லை
தாமரைகளோ
அதிகமாக கண்டுகொள்வதில்லை
ஆனந்தபிரசாத்
No comments:
Post a Comment