பாசி அடர்ந்திருந்த
கிணற்றின் கட்டில்
அடித்து துவைத்துக்கொண்டிருந்தேன்
மனசாட்சி கந்தலை...
கல்நெஞ்சக்காரன் நான்
தும்பைப்பூவாகுமென!
அதுவோ....
பூர்வ ஜன்மமெடுத்தேன்.....என
இழையிழையாய் நூல் பிரிந்து
சிலந்தி.....வலை பின்னியதேபோல்!
வாழ்வின் நூலிழையாய்
நம்பிக்கையும் எதிர்மறையும்
மீளவும்.....மீளவும்.....
ஊடும் பாவுமாக
நெய்யும் தறிக்குள் லயசுத்தமாக
நுழைந்து......நுழைந்து.....
என் பாதங்கள்
உராய்ந்த மண்ணையும்
இளமையையும்...
கூட்டிவைத்து துகில் கோர்த்து
பின்னிய புதுப்போர்வைக்குள்
எனக்கு
புனர் ஜன்மம் கொடுத்து
மீட்டுத்தருவதாக......
வாக்குறுதியளித்தது.
ஆனந்தபிரசாத்.
No comments:
Post a Comment