ஒருவழிப்பாதையில்
ஓடிய காலங்கள்
ஓய்வதுவும் எந்தநாளோ?
கருவிலிருந்தே
கால் விளையாடி
களித்த நிலம் கனவாகுமோ?
கானலை நீராய் மனவெளியில்
காணலெனும் நிலை
கனவாயாகுமோ?
வேனிலை ஆழ்மனம்
வெறுத்தே போகுமோ?
வெந்தநிலை மாறுமெந்த
வேளையோ?
காத்திருப்போம்....தினம்
பார்த்திருப்போம் எங்கள்
பாதைகளில் பூக்களாமோ?
கருவிலிருந்தே
காலமெல்லாம் மழை
காணா பூமியும்
கனவாய் ஆகுமோ?
பருவ நிலைகளில்
பயணம் போகுமோ?
பனிமழை மாறுமெந்த வேளையோ?
நேற்று நடந்தவை
நிழலாயிருக்கட்டும்.....
காற்று தரும் தென்றலாமோ?
நேத்திரங்கள் தரும்
நீரலைகள் எம்மை
வார்த்தெடுக்கும் அன்பிலாமோ?
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment