எனக்காகவும்
ஒரு கீற்றைத் தெளித்த
நிலவை விழுங்கி
புளியேப்பம் விட்டன இரவுகள்...
பாலப்பத்தை
மிக நேர்த்தியாக
கபளீகரம் செய்தது
இருளின் நிழல்....
நிழலில் ஒதுங்கிய நிஜங்கள்
பகலுக்காய் பதுங்கின....!
இருப்பின்....இருப்பே.....நாளையென்று.....
பல்லைக்கடித்தபடி.....
கிழக்கொன்றும் புலரவில்லை
கீழ்வானின் செப்படிவித்தைகள்
சூம்பிப்போனது
சூரியனின் ரஸவாதங்கள்...
பாம்புப்பிடாரனின்
கீரிப்பிள்ளை விளையாட்டாக......
நான்.....
மேற்கில் உதிப்பதே மேல்!!!
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment