எனது சாளரத்தின் வழியாக
வரும் காற்றைக்கூட....நான்
நம்பியதில்லை
நீரோடித்தெளிந்த நிலைகளையும் கூட...!
பாடிப்பாடியே...
குரல் நாண்கள் அறுந்த பின்னும்
வீடு சுமக்கும் எத்தனங்கள்...
இந்த நாள் மிதக்கும்
என் சுமைகள் ஆழ்ந்தமிழாது......
ஆழ்கடல் பூக்கள்
என்னைக் கரை தள்ளும்.....
இயங்கியலின் சாராம்சம்
இருப்பை நிலை நிறுத்தும்....?
கேள்விகளுக்குள்ளே குறுகியாயிற்று.
என்னை பரிகசித்தேகும்
ஆற்றின் சுழிப்பிற்குள்
அகப்பட்டு....ஏதோவொரு நாணலின்
வேருக்கடியில்........
மனிதரை புரிந்துகொண்டேன்.
ஆனந்தப்ரசாத்.
No comments:
Post a Comment