ஒரு நாளின்
கடைசி நிமிடத்தில்
நான் பிறந்தேன்!
00.00.0000
புதனா, வியாழனா....
கிழமை புரியவில்லை
முப்பதா, முப்பத்தொன்றா....
திகதியில் தெளிவில்லை
எங்கோ ஒரு தேசத்தில்
அந்திப் பொழுதாகலாம்!
இன்னுமொரு ஊரில்
இனிய காலையாய்.....
மற்றுமொரு நாட்டில்
மத்தியானமாய் கூட......!
ஏதாவதொன்றில்
எனது பலன்களில்....
குரு...சந்திர யோகம்
குறுக்கிடாதா?
ஆனந்தபிரசாத்.
- Maithily Arul, Parthi Murugan, Mathusha Mathangi and 28 others like this.
- Vj Yogesh "ஏதாவதொன்றில்
எனது பலன்களில்....
குரு...சந்திர யோகம்
குறுக்கிடாதா" heart touching poetry bro! - Pena Manoharan ”நாளென் செய்யும் கோளென் செய்யும்-என்னை/நாடிவந்த தீவினைதான் என்செய்யும்/குமரேசன் இருதாளும் சிலம்பும் தண்டையும்/சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்/எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”-குமரகுருபரர்.அருமை ஆனந்த் பிரசாத்.
- Anand Prasad ''நாளென்செயும் வினை தான்என்செயும் எனை நாடிவந்த
கோளென்செயும் கொடுங் கூற்றென்செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் ஷண்முகமும்
தோளும் கடம்பும் எனக்குமுன்னே வந்து தோன்றிடினே!'' - Jeyarany Norbert அருமையான கவிதை வெகுநாட்களின் பின் வாசித்த மனதைவிட்டு அகலாத கவிதை. நாள் நடசத்திரம்,நேரம் காலம் என்றெல்லாம் பார்ப்வர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை.
- Power Ful Brain //ஏதாவதொன்றில்
எனது பலன்களில்....
குரு...சந்திர யோகம்
குறுக்கிடாதா?// என்ன சொல்வதென்றே புரியவில்லை. சில மூட நம்பிக்கை கொண்ட மனிதர்களுக்கான சாட்டையடி இக்கவிதை. வாழ்த்த வயதில்லை வாய் மூடி உணர்கின்றேன். - Rajaji Rajagopalan "எனது பலன்களில்....
குரு...சந்திர யோகம்
குறுக்கிடாதா?"
என ஏங்குமளவுக்கு அநாதையாய், ஆதரவற்று வெறும் நிலத்தில் உயிரோடு மன்றாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் உலகெங்கும் ஏராளம்.
யோகங்களையெல்லாம் பணமுள்ளவர்களே வாங்கிக்கொண்டார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு ஜாதகத்தில்கூட யோகம் கிடையாது என்பதை ஆனந்த் அழகாகவே சொல்லியிருக்கிறார். - Krishna Sivapragasam .....
விளிம்பில் நிற்பவருக்கு
விலாசம் இல்லையென
வீணான பயம் உனக்கு - மகனே
விளிம்ரில் நிற்பதே ஒரு
விலாசமடா அது உனக்கு!
No comments:
Post a Comment