கேள்வி
கேட்பதற்காகவே
பிறந்து
கேட்டுக்கொண்டிருப்பதற்காகவே
வளர்ந்து
கேட்டதற்காகவே
மடிந்தும் போனேன்!
ஒரு பள்ளிக்கூடத்தை
தூக்கிக்கொண்டு அலைந்தேன்
பின்பு
ஒரு நீதிமன்றத்தை
தூக்கிக்கொண்டு அலைந்தேன்
விளங்கிக்கொள்வதற்கும்
விசாரிப்பதற்கும்
வித்யாசம் தெரிந்த போதில்.....
பதில் மட்டும்
கேள்வியாகி விட்டது!
ஒன்று மட்டும் புரிகிறது...
கேள்வி கேட்பதை விடவும்
மெளனமாக
கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!!!
ஆனந்தபிரசாத்.
- Ku Pa, Sugan Kanagasabai, Kandiah Krishnaparan and 25 others like this.
- VJ Yogesh //விளங்கிக்கொள்வதற்கும்
விசாரிப்பதற்கும்
வித்யாசம் தெரிந்த போதில்.....
பதில் மட்டும்
கேள்வியாகி விட்டது!// - VJ Yogesh மௌனமாகவிருத்தல் பல சமயங்களில் எமது பலமாகவிருந்தாலும் சில சமயங்களில் அதுவே பலவீனமாகவும் மாறக்கூடும்! கருத்துள்ள கவிதை அண்ணா..!!
- Rajaji Rajagopalan எல்லாம் அறிந்தபிறகு ஒருவனின் முடிவு:
கேள்வி கேட்பதை விடவும்
மெளனமாகக்
கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!!!
கற்றதனாலாய பயனென்ன? பெரும் சந்தேகத்துக்குப் பதில் தராமலே தப்பிக்கொள்கிறார், கவிஞர். - Power Ful Brain கேட்க வேண்டிய நேரத்தில் கேட்கப்படாமல் விடும் கேள்விகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்க முடியா பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும் அண்ணா.
- Emiliyanus Judes விளங்கிக்கொள்வதற்கும்
விசாரிப்பதற்கும்
வித்யாசம் தெரிந்த போதில்.....
பதில் மட்டும்
கேள்வியாகி விட்டது! - Thiru Thirukkumaran ஒன்று மட்டும் புரிகிறது...
கேள்வி கேட்பதை விடவும்
மெளனமாக
கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்!// - Iniyavilamban Senthamilon · 19 mutual friendsகுற்றத்தை சுட்டுவாய் என்று எண்ணினேன்... ஆனால் மௌனமாய் இருந்துவிட்டாய்...
- Anand Prasad Rajaji Rajagopalan''தப்பித்து வந்தானம்மா......பாவம்
தனியாக நின்றானம்மா.....காலம்
கற்பித்த பாடத்தின் அடிதாங்க முடியாமல்...!!!'' - Anand Prasad ஒரு 24 மணிநேரத்தில் எனது கேள்விக்கு இவ்வளவு
பதில்கள் வந்தது இதுவே முதல்தடவை!!!
நன்றி முகனூல் நட்புகளே....சாதகமோ...பாதகமோ....
எதுவாயினும் மனித நேயம் என்னும் சாராம்சத்தை
விதைக்க முற்படுகிறேன். என் முதற்கண் நன்றி....
I am so greatful to Mr. Mark Zuckerberg. - Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "..மெளனமாக
கேட்டுக்கொண்டிருப்பதே...மேல்" அதைத்தான் விடாது கடைப்பிடித்துத் தப்பிப் பிழைக்கிறோம். அருமையான கவிதை
No comments:
Post a Comment