Wednesday, September 26, 2012

பயணம்

பயணம்

 



இருட்டுக்கும் நிழலுக்கும்
இருக்கிற சம்பந்தத்தை
தெரிந்துகொண்டேன்.....
இந்த வாழ்வு
இருண்டு கிடக்கிறது
வாழ்வின் நிழலாக
இருத்தல் தெரிகிறது
இருளில் நிழலைத்தேடுவது கூட
ஒரு சுஹானுபவம்தான்!
இந்த அகதி வாழ்வு
தற்காலிக நிழல்களை
தேசம்..... தேசமாக
தெளித்துக்கொண்டு போகிறது...
உடம்போடு சேர்ந்த
அழுக்கைப் போல....
இருள் ஒட்டிக்கொண்டிருக்கிறது
ஆசைதீரப் புணர்ந்தவனுமில்லை
அழுக்குப்போக குளித்தவனுமில்லை!!!
சிருஷ்டிகளை மறந்து
கூத்தடிக்கும்
இருளையும் நிழலையும்
உதறித்தள்ளி விட்டு
அந்தப்பெரிய வெளிச்சத்தில்
கரைந்து போவதற்காய்......
பல்லை கடித்தபடி.......
ஆனந்தப்ரசாத்.

  • Pr Rajan அந்தப்பெரிய வெளிச்சத்தில்
    கரைந்து போவதற்காய்... you can merge to the deep dark shadows as well! good poem!
  • Vj Yogesh ”இருளையும் நிழலையும்

    உதறித்தள்ளி விட்டு

    அந்தப்பெரிய வெளிச்சத்தில்
    ...See More
  • Rajaji Rajagopalan இந்த அழுக்கு நிறைந்த இருட்டறையில் இக்கவிதையை எழுதினவனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இருட்டில்போய் ஒருவனைக் கண்டுபிடிக்க முடியுமா? முடியும். ஏனென்றால் அவன் மிகப் பொறுமைசாலி, எப்படியும் ஒரு நாள் ஒளியைக் கண்டுவிடுவான் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறான். அந்த ஒளி வெள்ளம் வரும்போது வெளியில் வந்து கூத்தடிக்கப்போகும் அவனையும் அவன் நிழலையும் ஒருங்கே காணும்போது அவன் கவலைகள் எல்லாம் ஒழிந்துபோயின என்றும் சுதந்திரமான வாழ்வு இறுதியில் வந்து சேர்ந்தது என்றும் நானும் அவனோடு சேர்ந்து மகிழ்வேன்.
  • Pena Manoharan "Intha agathi vaazhvu..." varikalil ulla vali aanmaavai azhavaikkirathu.arumai.vaazhththukkal.Vaigaikarai Vaasangaludanum Naesangaludanum.
  • Vathiri C Raveendran இந்த அகதி வாழ்வு

    தற்காலிக நிழல்களை

    தேசம்..... தேசமாக
    ...See More
  • Thiru Thirukkumaran வாழ்வின் நிழலாக

    இருத்தல் தெரிகிறது

    இருளில் நிழலைத்தேடுவது கூட
    ...See More
  • George Singarajah அழகான கவிதை
  • Arasan Elayathamby ஆசைதீரப் புணர்ந்தவனுமில்லை

    அழுக்குப்போக குளித்தவனுமில்லை!!!...h ஹ்ஹஹஹா "
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan அற்புதமாகச் சொன்னீர்கள். "தேசம்..... தேசமாக
    தெளித்துக்கொண்டு போகிறது...
    உடம்போடு சேர்ந்த
    அழுக்கைப் போல...."
  • Emiliyanus Judes இருள் ஒளியாகும் தருணம்

    துயில் கலைந்து

    நீ விழித்திரு
    ...See More

Sunday, September 23, 2012

மாதத்துவம்

மாதத்துவம்




மாங்கொட்டைக்குள்
ஒரு
சிதம்பர ரகஸ்யம்!
கறுப்பென்றும் வெளுப்பென்றும்
கருவிலேயே நிறபேதம்
கடை...சீ...வரைக்கும்
சுரண்டித்துப்பினோம்.
கறுத்தக் கொளும்பானும்
வெள்ளைக் கொளும்பானும்
பொறுத்த யாழ்ப்பாணத்தே
பொலிந்து செழித்தன
பிரதேச வாதம்
பொடிப்பொடியானது
பிறதேசங்களுக்கும்
செறிந்து பரந்தது
ஆசியாவில் இருந்து
அவுஸ்திரேலியாவில் வெந்து
ஐரோப்பாவில் நொந்து
அமேரிக்காவில் குளிர்ந்து
தோலும் பறிபோய்
சுளையும் சூறையாடப்பட்டு.....
விதைக்கு முளைக்கும்
ப்ராப்தமில்லை
நாங்கள்
கொட்டைகளை
நேசிப்போம்
என்றைக்கேனும்
உரிய மண்ணில்
உயிர்க்கும்.... தானே!
ஆனந்தபிரசாத்.
*ஒளிப்படங்கள் உதவி
கவிஞர் யோகேஷ் யாழ்ப்பாணத்திலிருந்து.