Thursday, December 19, 2013

உங்களுக்கு பிடிக்காது....இருந்தாலும்.

உங்களுக்கு பிடிக்காது....இருந்தாலும்.

 




ஒரு கோழிமுட்டைக்கு

எவ்வளவுகோபம்?

கொதிக்கும் எண்ணைக்குள்

பொரியப்போட்டால்.......

குஞ்சாக முன்னமே

இவ்வளவென்றால்

வெஞ்சாமரம் வீசி

நடைபோடும் விகசிப்பில்...

எவ்வளவு கோபம் எழும்....

கறியாய் குழம்புக்குள்

கொதித்து....கொதித்து....

இயற்கையே இப்படித்தான்!!!
ஆனந்தபிரசாத்
 

  • George Singarajah ஆகா....
    அருமை
    தமிழில் ஒரு புதிய மு�யற்சி.
    வாழ்த்துக்கள் தோழர்.
  • Yayini Lingam வித்தியாசமாக இருக்கிறது...பகிர்வுக்கு நன்றி அய்யா.
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan சொல்லியதும் சொன்ன முறையும் பிடிக்கிறது.
  • Rajaji Rajagopalan #வெஞ்சாமரம் வீசி

    நடைபோடும் விகசிப்பில்...// ஏதோ முக்கியமாய்ச் சொல்ல வருகிறீர்கள். என்னவென்றுதான் புரியவில்லை.
  • Anand Prasad Rajaji Rajagopalan''வெஞ்சாமரம் வீசி நடைபோடும் விகசிப்பில்...// ஏதோ முக்கியமாய்ச் சொல்ல வருகிறீர்கள். என்னவென்றுதான் புரியவில்லை....''
    ககன வெளிக்கும்....புவியீர்ப்பு மையத்திற்கும்....நடுவே.....
    ஒரு மெல்லிய திரை விழுகிறதல்வா?
    ...See More
  • Kiruba Pillai வாவ் முட்டை குழம்புக்குள்ளே இவ்வளவா ..மூளையை கசக்கி தான் பார்த்தேன் இப்ப தான் புரிகிறது .
     
  •  

No comments:

Post a Comment