ஆடு மாடு கோழி பன்றி
காடை கெளதாரி உடும்பு
முயல் மான் மரை திரளி
கயல் கரும்பாரை அறுக்குளா
கணவாய் இறால் கருந்திரளி சுறா
பிணமாய் குளிர்பதனிக்குள் உயிர்த்திருக்க
நானும்தான்
ஆனந்தபிரசாத்
சாயத்தை தந்துவிட்டு சுகியென்று அடிபணியும்
தேயிலையாய் வாழ்வென்ற தேய்வுக்குள் நட்பின்
தோய்வுக்குள் ஆழ்ந்து தொலைந்த நண்பனுக்கு....
வாயில்லை சொல்ல வார்த்தை வரவில்லை
நீயில்லை என்பதோர் நிஜமோநிழலோ அறியேன்
காயங்களாறும்....இவ்வரிகள் உனக்கேதான்.
அரசியலுக்கப்பால் எனதாழ்மனதை ஊடுருவி
உரசிய நண்பனுக்கு உரியது இந்த வரிகள்.
No comments:
Post a Comment