கண்ணிமைக்கும் பொழுதில்
கடலின் அலைகள் கதை முடிக்கும்
சின்ன அரும்புகளோ
கரையில் விழிநீர் கதையெழுதும்.......
(கண்ணிமைக்கும்)
ஓலைகளை ஓடுகளாய் மாற்றியவர்
ஒரு நாள் ஒருபொழுதில்
ஓலங்களை வரவுவைத்து ஓய்ந்ததென்ன
தரையில் ஆழ்கடலில்
மாளாத சோகத்தில் மலரும் பூக்கள்
மாறாது மாறாதினி வளரும் நாட்கள்....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)
வறுமையிலும் வாழ்வினையே தேடியவர்
வளமே நாடியவர்
பிறவி பெருங்கடலை நீந்துமுன்னே
பிணமாய் ஆனவர்கள்
தெளிவில்லை எண்ணிக்கை
தெரியாத நம்பிக்கை
இனியில்லை இனியில்லை
இதுதான் உண்மை....
இதில் மொழியென்ன
மதமென்ன
நிறமென்ன மனிதா......
(கண்ணிமைக்கும்)
No comments:
Post a Comment