Wednesday, January 2, 2013

வீடுபேறு...முக்தி...மோக்ஷ்ம் இவைகளைப்பற்றி....!

 



கடிகாரத்தை
கொஞ்சம் நிறுத்திவிட்டு
இளைப்பாறலாமா பார்க்கிறேன்
காலக்குதிரை
பந்தயக் குதிரையானது
மூக்கின் வழியே புகைகக்கி
வாய்வழியே நுரை தள்ளி.....
நாடித்துடிப்பினும்
நான்கு மடங்கான
குழம்போசை எழுப்பிவெகு வேகமாக.....
என்னால் சேர்ந்து ஒடமுடியவில்லை
முன்நாளில் எனது
பெளதீக வாகனம் ஓடிய ஓட்டம்...?
இடப்புறமும் வலப்புறமும்
அலம்பல் வேலிகளும்
கிடுகு வேலிகளும்....
குடிசை, கல்வீடுகள்....
மதிற்சுவரில் ஒட்டிக்கொண்டிருந்த
சிவாஜி கணேசனும், எம்ஜீயாரும்
சரோஜாதேவியும், சந்தியா புத்ரியும்....
ஏன்....
இவர்களை முத்தமிட்டுக்கொண்டே
மோஹத்தீயில் வரண்ட
சாணிக்கட்டிகளையும் கூட....
படு வேகமாக பின்நோக்கித் தள்ளிவிட்டு
எனது வாகனம் பறந்துகொண்டிருந்தது
இப்போதோ.....நான்
நடுத்தெருவில்
தன்னந்தனியனாக.......
கார்களும், கட்டிடங்களும்
பேரோசைகளும், பெரு வெளிச்சங்களும்
எனக்கு இடமும் வலமுமாய்
அநியாயமாய் என்னை
பின்நோக்கி உதைத்துத்தள்ளிவிட.....
வழி மாறிப்போய்விட்டேன்!
முகவரியைக் காட்டி
மொழி தெரியாவூரில்
உதவி கேட்க எத்தனிப்பதற்குள்....
முப்பதுபேர்
தாண்டிப்போய்விட்டருந்தார்கள்!
முப்பத்தோராமவனை
சிக்கெனப்பிடித்தேன்
மூளையை குழப்பிவிட்டுப் போய்விட்டான்
இன்னமும் நான் நடுத்தெருவில்....
உண்டான நிலமும் கிட்டவில்லை
ஒண்ட வந்த புலமும்
ஒட்டவில்லை.....
நான்அலாஸ்கா போகப்போகிறேன்!
அநுபவங்களை ஆறுதலாக
எழுதலாமென்று ஆரம்பித்தால்......
''அவனுக்கும் அவளுக்கும்
அரும்பியது காதல்....'' என
முதல்வரியைத் துவங்க
அவனும் அவளும்
அடித்துப் பிய்த்துக்கொண்டு
ஆளுக்கொரு குழந்தையோடு
விவாகமும் ரத்தாயிற்று!
மீன் பிடிக்கலாமென்று
தூண்டிலை எடுத்துக்கொண்டு
கதவைப் பூட்டி
கிளம்புமுன் பார்த்தால்.....
அதுவே சமர்த்தாக வந்து
குழம்புக்குள் உட்கார்ந்திருக்கிறது.
'எள்' என்று வாயெடுக்க
நல்லெண்ணை புட்டியில்!
கடிகாரத்தை நிறுத்திவிட்டு
அலாஸ்கா போகிறேன்.
ஆனந்தப்ரசாத்.





  • Iniyavilamban Senthamilon சும்மாய் இருந்திருந்தாலே எல்லாம் சுபமாய் முடிந்திருக்குமே எதற்கு இவ்வளவு பறப்பு ?

  • VJ Yogesh காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.... புலம் பெயர் அவலத்தை சொல்ல வருகிறதா கவிதை?

  • Aangarai Bairavi Vegamana kavithai.el endraal ennaiyavadhu vazhvin sogamumdhaan. nammai varutheadukka.pulam perindhaalum thodarndhu thodarum namakkanavai. Ena en puridhalil nirkkiradhu azhagana ungal padaippu.

  • Gokul Salvadi காலம் மனத்தில் ஒடுக்கம் !

  • Arasan Elayathamby அலாஸ்கா ,,love that land! நல்ல சிந்தனை ! இந்த கவிதைக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடுகும் ( படம் ) என்ன தொடர்பு கவிஞ்சர்?

  • Gaandhi Baabu · Friends with Srinivas Kavenayam
    Engay sentraalum kaalakadighaaram nintru vittuviduma??!!!

  • Thiru Thirukkumaran கடிகாரத்தை

    கொஞ்சம் நிறுத்திவிட்டு

    இளைப்பாறலாமா பார்க்கிறேன்


    காலக்குதிரை

    பந்தயக் குதிரையானது//

  • Rajaji Rajagopalan இது புலம்பெயர்ந்த அவலமிலை, பிறந்த நாட்டுக்குப் போனீர்களோ சிவாஜிக்கும் எம்ஜீக்கும் பதிலாகப் புதியவர்களைப் பார்ப்பீர்கள். அவ்வளவுதான் வித்தியாயம். இந்த எண்ணற்ற அவஸ்தைகளிலிருந்து தப்புவதற்கு அலாஸ்கா போவதுதான் ஒரே வழி. கடிகாரத்தை நிறுத்திவிட்டு...//

  • Anand Prasad Arasan Elayathamby: excellent question raised about my writing. Thank you for your observation.
    Based on the reminiscence of my childhood Physics (taught by P.K.Balasingam), this formula is related to the theory of relativity.
    I used this as a metapho
    r. E=mc^2 states that objects moving at the speed of light gains mass....and energy....
    In other words, the faster the objects travels, the heavier it becomes.....
    In this poetry, the object is me who seeks refuge from outer world that doesn't belong to me.
    In order to secure myself, I'm travelling at a very high speed (c^2) to catch up with the contemporary pace.
    Consequently, as my speed increases, my "mass" of struggle and the waste of energy (E) proportionally increases.
    Hope you could establish the ironic relationship between the snail (top image) and the famous Einstein's equation.
    (The word "pace" I refer to besides all the common problems around the world is....the search for human dignity and peace.)
    By the way my friend, I'm amazed by your diligence in your Tamil literature acquisition.
    Be proud to be a Centralite...as I am.

  • Arasan Elayathamby " In this poetry, the object is me who seeks refuge from outer world that doesn't belong to me."..you are digging into next level Mrarks Planks¨s Quantam physics!,,so to speak Amazing

  • George Singarajah மனசு மட்டும் பாரமாய் எனக்கு இருந்து கொண்டிருக்கிறது ...எதையோ இழந்த தவிப்பு எனக்கு இன்னும் அடங்கவில்லை ...

No comments:

Post a Comment