Wednesday, December 26, 2012

***மரணநாள் தெரிந்தால்....!!!

 


அழைப்பிதழ் அனுப்புவேன்
சொந்தம் பந்தங்களுக்கு
சொல்லியனுப்ப மாட்டேன்
நண்பர்களுக்கு மட்டும்.....
நண்பர்களிலும்.....நல்ல
நண்பர்களுக்கு மட்டுமே.
பொறுக்கி எடுத்த பொறுக்கிகளுக்கே.
தினசரி மாலையில்
'மெத்ரோ' முகப்பில்
வயலின் வாசிக்கும்
மானசீக குருவுக்கு....
நிச்சயமாய் அழைப்பு.
சில்லறை இல்லாதேனும்
சிரித்துக்கொண்டே இசைப்பான்.
சாவுக்கு முதல் நாள்
ஒரு சிறு 'பார்ட்டி'
செளக்கியமாயிருந்தால்....
சந்தனக்கட்டை
சரிப்பட்டு வராவிட்டால்
'சைக்கிள் டயர்'
ஏனெனில் நானொரு
இந்து!?!?
இயக்கத்தைப் பொறுத்து
குருவிகள் உட்காரக்கூடியகம்பம்......
அல்லதுகுஞ்சுமீன் விளையாடும்
கடலின் ஒரு பகுதி
மூன்று நாட்கள் தாங்கக்கூடிய
முகச்சவரம் செய்துகொள்வேன்
வேஷ்டி சட்டை.....
வாசனைக்குப் பன்னீர்...
அடுத்த 'ட்ரான்ஸிற்'
எதுவென்று தெரியாதே?
சாப்பாடு?......வேண்டாம்
எனக்காக ஒரு இடியப்பம்
இந்தப் பிரபஞ்சத்தில்
இல்லாதே போய்விடுமா?
நானாகவே போய்
பெட்டிக்குள் தூங்கும்
நாள் மட்டும் தெரிந்தால்.......
கடன்களை
கடன்பட்டாவது
அடைத்துவிடுவேன்
எனது தலையெழுத்தை
வாசிக்க முடிந்திருந்தால்
தலைப்புச்செய்திகளை
தூக்கியெறிந்திருப்பேனே?
எனக்கு யாரும்
மரண தண்டனை
விதித்திருக்க மாட்டார்கள்.
***இருபத்தியொரு வருடங்களின்முன்புஎழுதியது....
இன்னமும்உலகும் அழியவில்லை.....
கூடவே நானும்தான்!

  • VJ Yogesh //எனது தலையெழுத்தை

    வாசிக்க முடிந்திருந்தால்

    தலைப்புச்செய்திகளை


    தூக்கியெறிந்திருப்பேனே// உலகத்தை உற்று உணர்பவன் தான் கவிஞன்... அருமை அண்ணா!
  • Rajaji Rajagopalan -----------0------------

    மெத்ரோ' முகப்பில்
    வயலின் வாசிக்கும்
    மானசீக குருவுக்கு....//


    செளக்கியமாயிருந்தால்....
    சந்தணக்கட்டை
    சரிப்பட்டு வராவிட்டால்
    'சைக்கிள் டயர்'...//

    எனக்காக ஒரு இடியப்பம்
    இந்தப் பிரபஞ்சத்தில்
    இல்லாதே போய்விடுமா?...//

    மிக அற்புதமான வரிகள். மாண்புடன் வாழவிரும்புபவர்கள் மதிக்கவேண்டிய மனித உணர்வுகள்.
  • Aangarai Bairavi Maranaththilum kambeerathai paarungappa! Santhanam 2 suzhi anna!
  • Anand Prasad Aangarai Bairaviதிருத்திவிட்டேன் தம்பி...... நன்றி என் எழுத்துப்பிழையை
    எடுத்தியம்பியதற்கு. ஒரு சிறு விண்ணப்பம்......
    ஏன் நீங்கள் தமிழில் கருத்துப்பகிரவிரும்புவதில்லை?
  • Power Ful Brain எதற்கும் இன்னொரு நாள் தானே? காத்திருந்து தான் பார்ப்போமே?
  • Aangarai Bairavi Anna! Enakkum aasaidhaan.tamizhil ezhudha! Indhap payapulla phone la. Illaiye naan en seivean.
  • Pena Manoharan சைக்கிள் டயர்,குருவிகள் உட்காரக்கூடிய கம்பம் நல்ல குறியீடுகள்.மூன்று நாட்கள் தாங்கக்கூடிய முகச்சவரம்,எனக்காக ஒரு இடியப்பம் நல்ல தொன்மங்கள்.அருமை.அற்புதம்.’எரிதலும் உயிர்த்தலுமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது மனித ஜீவிதம்’என்று என்னுடைய குறுங்கவிதையொன்று முடிவுறும்.அதை ஞாபகப்படுத்தியது உங்கள் பதிவு.வாழ்த்துக்கள்.
  • Thiru Thirukkumaran இன்னமும்உலகும் அழியவில்லை.....கூடவே நானும்தான்..//
  • Arasan Elayathamby மரணநாள் தெரிந்தால்........வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் ஏனோ தானோ எண்டு இருக்கும்!
  • Dr.Muttiah Kathiravetpillai Muruganandan "இன்னமும்உலகும் அழியவில்லை.....கூடவே நானும்தான்!" இணைகிறேன்.
  • Vanitha Devasigamony 'மெத்ரோ' முகப்பில்
    வயலின் வாசிக்கும்
    மானசீக குருவுக்கு....
    நிச்சயமாய் அழைப்பு.
    சில்லறை இல்லாதேனும்
    சிரித்துக்கொண்டே இசைப்பான்.
  • Thayaparan Nallaiah · Friends with Kannathasan Krishnamoorthy
    மாயா கலண்டர்.......மாயா கலண்டர் எண்டு கத்தினவை எல்லாம்.இனி "மாயா மாயா எல்லாம் மாயா " எண்டு பாடட்டும் ..........அவையள் இப்பிடி சொல்லுவினமா " அது போன கிழமை , இது இந்தக்கிழமை " ? .
  • Thayaparan Nallaiah · Friends with Kannathasan Krishnamoorthy
    தற்போது நம்மால் பயன்படுத்தப்படும் எல்லாமுமே கிரேக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை......<, விஞ்ஞானம் , தத்துவம் , முதலியன> அவர்களே..உலகுக்கு இவை வழங்கிய கிரேக்கர்களே அமைதியாக இருக்கும்போது மற்றவர்கள் எதற்காக கூச்சல் இடுகிறார்கள் , உலகம் அழிகின்றது , சூரியன் ,இருள்கின்றது சந்திரன் எரிகின்றது என்று ?

No comments:

Post a Comment