Wednesday, December 26, 2012

உலக கவிதை இயக்கங்கள்....(2)

 



    "உன்னை அவர்கள் கொன்றார்கள்
    உன்உடலைப் புதைத்த இடத்தைக் கூறவில்லை
    இந்த நாடே
    உனது தினைவுச் சின்னமாதலால்
    நிகராகுவாவில்
    நீ புதைக்கப்படாத ஒவ்வொரு அங்குலத்திலும்
    நீ பிறந்துவிட்டாய்'சுடு'
    என்ற ஆணையால்அவர்கள்
    உன்னைக் கொன்றதாக நினைத்தார்கள்
    அவர்கள் செய்ததெல்லாம்
    ஒரு விதையைப் புதைத்தது தான்''
    அடுத்து மற்றுமொரு கவிதை
    உணர்வு பூர்வமாக நிறவெறியின் குரூரத்தை சித்தரிக்கிறது.
    டென்னிஸ் ப்ரூட்டஸ்ஆங்கிலத்தில் எழுதும் தென்னாபிரிக்க கவிஞர்.
    1956ல் போர்ட் எலிஸபெத்தில்பெரிய வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற ஊர்வலத்தில்
    பொலிசாரால் சுடப்பட்ட ஜான் நான்கோசா ஜிபே என்கிற கறுப்பு இனத்தவருக்கு சமர்ப்பணமாக
    'ஒரு இறந்த ஆப்பிரிக்கனுக்காக....' ( For a dead african) என்ற தலைப்பில்
    இவர் எழுதிய கவிதை.
    ''நமக்கு வீரர்களோ போர்களோ இல்லை
    வீசியடிக்கும் வெறுப்பு மழையின் கீழ் மலரும்
    பல்வேறுபட்ட காயங்களால்
    இறந்து போகும்ஒரு குமட்டும் அரசின்
    பலியாட்கள் மட்டுமே.
    சலிப்பூட்டும் குறிப்புடன் சரித்திரம் பதிவு செய்ய
    யுத்தங்களோ சண்டைகளோ நமக்கு இல்லை
    கண்களற்ற இரவுகளில் கொல்லப்படும் கைதிகளும்
    இருளில் நிகழும் தற்செயலான சாவுகளும் மட்டுமே
    ஆயினும் நம் நாட்டின் விடுதலைக்காய்
    மடிந்தவர் பட்டியல் கேட்கப்படும்
    போதுவியப்பு ஏதுமின்றி
    இறுதிப் பரிசை அடைந்த வீரர்களின் அருகில்
    பெயரற்ற ஆயுதமற்ற இவர்கள்.''
    அபத்தங்களின் க்ளைமாக்ஸில் புரட்சி வெடிக்கிறது.
    யுத்தங்களின்காரணங்கள் வெவ்வேறானதாக இருக்கலாம்.
    ஆயினும் அனைத்திலும் அடிநாதம் ஒன்றே.
    அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுவது என்பதில் ஆரம்பிக்கிறது.
    உலகின் பல பாகங்களிலும் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்
    மக்களிடமிருந்து முனகல்களாக வெளிவந்து கொண்டிருக்கும்கவிதைகளை
    புரிந்து கொள்வதன் மூலமாகவாவது ஒரு நிம்மதியை
    தற்காலிகமாகவேனும் நாம் தேடிக்கொள்ள இக்கவிதை இயக்கங்கள் உதவுகின்றன.
    இதனாலேயே இவை பரந்த அளவில் மொழிபெயர்க்கவும் படுகின்றன.
    தென்னாபிரிக்க கவிஞர் டென்னிஸ் ப்ரூட்டஸ் எழுதிய
    இன்னொரு கவிதை
    'குருதி ஆற்றின் நாள்' (Blood river day) என்ற தலைப்பில்.
    ''ஒவ்வொரு வருடமும் இதே நாளில்
    அவர்கள் தங்களுடைய பூட்ஸ்களால்
    தரையைத் தாளம் தட்டுகிறார்கள்
    மந்திரங்களை உறுமுகிறார்கள்
    குருதியின் வாசனையை எழுப்ப
    அதற்கான காற்றை வெறியுடன்
    மோப்பமிடுகிறார்கள்
    குற்றம்அவர்களை விரட்டுகிறது
    கரடு முரடான கொடியமறைவிடம் நோக்கி.....
    ஆனால் அந்தி வேளையில்
    என்னிடம் வருவது
    எங்கும் நிரம்பிய தூசியின் மணம்
    சுடு மணலில் மழை
    ஜல்லடைத் துளிகளிடும் போது
    மண்ணின் நல்ல மணம்
    தூசியின் அந்த நல்ல மணம்
    பூமியெங்கும்ஒரே மாதிரித்தான் இருக்கிறது"
    அடுத்து அடோனியஸ் என்ற புனைப்பெயரில்
    பாரீஸில் வசித்துவரும் அரேபியக்கவிஞர் அலி அஹ்மத் ஸையத்
    எழுதியதொருகவிதை யுத்தத்தின் அச்சத்தால் ஆயிரக்கணக்கில்
    நமது மண்ணைவிட்டு புலம்பெயர்ந்து கொண்டிருக்கும் மக்களின்
    அவலநிலையைகண்ணீரோடு கண்முன்னே கொண்டு வருகிறது.
    தலைமறைவு (Underground)
    ''எம் விழி இமைகளின்
    இடையில்கடந்து சென்றன நகரங்களின் இருப்பு
    எம் முகங்களின்முரண் முகங்களின்
    பின்னேநாங்கள் கூக்குரலிட்டோம்
    காணாமல் போய்விட்டவர்களைப்போல்
    ஒவ்வொரு நகரத்தின்
    அடிநிலைக் கல்லறைகளுக்கு
    உள்ளும் நாங்கள் வாழ்கிறோம்
    ஓடுகளுக்குள் பதுங்கியிருக்கும்
    நத்தைகள் எனநிராகரித்து நிற்கும்
    நகரங்களே!
    வாருங்கள்எம்மைக் கண்டு கொள்ளுங்கள்.''
    அபத்தங்களுக்கெல்லாம் அழகான நியாயம் கற்பித்துக்கொண்டுஇருக்கும் வரை
    சிறுபான்மையாகட்டும், ஒடுக்கப்படுவோர்ஆகட்டும் படு குஷியாகத்தான் இருப்பார்கள்.
    தாங்கள் அசடுகள்ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணரத்துவங்கியதும்
    ஆத்திரம்அடைகிறார்கள். ஆயுதப்போராட்டம் வரை போய்விடுகிறார்கள்.
    புரட்சி வெடிக்கிறது. போர்....போர்....போர்....
    இந்த ஆத்திரத்தைமுதலில் வெளியே கக்குபவர்கள் கவிஞர்களே.
    Songs are our weapons.....கவிதைகளே எங்கள் கனல் கக்கும் ஆயுங்கள் என்றுஉறுமியபடி
    பேனையைத் தூக்கிக்கொண்டு பாய்பவர்களும்இவர்களே.
    இந்த கோபத்தை தாக்கமேற்படும் விதத்தில் வெளிப்-படுத்திய கவிஞர்கள்
    உலகின் பல்லவேறு பாகங்களிலுமுள்ளபாதிக்கப்பட் மக்களால் இனம் காணப்பட்டார்கள்.
    மொழிபெயர்க்கப்பட்டார்கள். சிறுமை கண்டு சீறியவைகள் பூமியெங்கணும் பொதுமைப்படுத்தப்பட்டது.
    ஈற்றில் சிவரமணியின் வரிகளோடு.........
    ''தோழர்களே
    விலங்குகளுக்கெல்லாம்
    விலங்கொன்றைச் செய்தபின்
    நாங்கள் பெறுவோம்
    விடுதலை ஒன்றை''
    ஆனந்தபிரசாத்.




  • Arasan Elayathamby சிவரமணியின் ஒரு அருமையான கவிதைய சில வருடங்கள் முன் என்னோட சுவரில் பதிந்து இருந்தன்! பலருக்கு அது விளங்கவில்லை என்றார்கள்.சிவராமணி எதற்காக, எழுதிய எல்லா கவிதைகளையும் நெருபில போட்டு கொளுத்திப்போட்டு தற்கொலை செய்தார்கள் எண்டு ஒருவருக்குமே தெரியாது !

  • Pena Manoharan எம்.ஏ.நுஹ்மான் மொழிபெயர்ப்பில் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பிற்காகப் பதிப்பாளர் எம்.பௌஸர் பதிவினையே என் பதிலாகப் பகிர விரும்புகிறேன்.”போராடுவதற்கான நியாயங்கள் பூமிப்பந்தின் சகல திசைகளிலும் இன்னும் இருந்துகொண்டே இருக்கின்றன.அதுவரை போராட்டங்கள் வெடிப்பதையும் அது முன்னெடுத்துச் செல்லப்படுவதையும் எந்த ஆதிக்க சக்திகளாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இதை மெய்ப்பிக்கும் மண்ணும் மனிதர்களும்தான் பலஸ்தீனமும் பலஸ்தீன மக்களும்.....”ஈற்றில் சிவரமணியின் வரிகள் சிலிர்க்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.வாழ்த்துக்களும் நன்றிகளும் ஆனந்த்பிரசாத்.

  • Arasan Elayathamby சிவரமணியின் மரணநிகழ்வில் ரமணியின் நண்பர்கள் சேர்ந்து ஒரு கவிதை வாசித்தார்கள்,அந்த கவிதை முழுவதும் நினைவுஇல்லை ,கடைசி வரி இப்படி முடியும் " பிரியமமான நண்பியே எல்லாம் முடிய முன்னர் முற்றுபுள்ளிய ஏனம்மா முன்னுக்கு வைத்தாய் " நான் அந்த மரணவிடில கலந்துகொண்டு இந்த வரிகளை இன்னும் மறக்காமல் சுமந்துகொண்டு இருகிறன் ,ஒரு நல்ல கவிதை, கதை எப்பவுமே நினைவில இருக்கும் எண்டு சுஜாதா எழுதிஇருக்கிறார்!

  • Aangarai Bairavi Veppam tharum kavithai.por vetkaiyei thoondum kavithai.

  • VJ Yogesh நல்லதொரு பதிவு அண்ணா..!

No comments:

Post a Comment