Tuesday, August 14, 2012

எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

by Anand Prasad on Friday, August 10, 2012 at 9:38pm

இவர்களுக்கு இயற்கை
கற்றுக்கொடுத்தது என்ன?
இவர்கள் இயற்கையிலிருந்து
கற்றுக்கொண்டதும் என்ன?
கேள்விக்குறிகளைத் தவிர!
குறிப்பில்லாது எதையெதையோ
குறித்தெழுதும் போதெல்லாம்
ஆச்சர்யக்குறிகள்
அகல விரிகிறது....
பேச்சில்லை....பின்னும்
பிறிதோர் செயலுமில்லை
சுவாசத்தில் எப்போதும்
சிதைந்து போகும் காற்றுக்கு
விசுவாசமாயிருக்கும்
விதியிவர்க்கு வாய்த்ததில்லை
சினைப்படுத்த முடியாத
சிந்தனைகளுக்காக
முனைப்பெடுத்துப்போகும்
முற்போக்குவாதிகளாய்...
யாருக்கு யார்....என்ன வியாபாரம்?
புரிந்தவைகள் தேராநிலையில்
தெளிவு பெறவேண்டி
பாரெங்கும் அலையும்
பைத்தியக்கார்களாய்....
சமூக அலகுகளின்
சிறிய சமன்பாட்டுக்குள்
அகப்படாத ஜீவன்கள்....
அதிகம் புரிந்துகொள்ள
வசப்படாத ஆத்மாக்கள்....
வாழ்க்கை நதிப்போக்கினிலே
இணைந்து போய் யார்க்கும்
இலகுவில் லபிக்காத
பயற்றம் முளைகள்...
புதிய புதியதாய்
உயிர்ப்படைந்து
வெளிக்கிளம்பும்
உற்சாக கருவூலங்கள்.......
ஆனந்தபிரசாத்.

    • Vj Yogesh
      ‎"சமூக அலகுகளின்

      சிறிய சமன்பாட்டுக்குள்

      அகப்படாத ஜீவன்கள்....
      ...

      அதிகம் புரிந்துகொள்ள

      வசப்படாத ஆத்மாக்கள்...."
      See More
      August 10 at 9:46pm · · 1
    • Giritharan Navaratnam
      இவர்களுக்கு இயற்கை
      கற்றுக்கொடுத்தது என்ன?
      இவர்கள் இயற்கையிலிருந்து
      கற்றுக்கொண்டதும் என்ன?
      கேள்விக்குறிகளைத் தவிர!
      ...

      நண்பர் ஆனந்த பிரசாத் பொதுவாக 'எழுத்தாளர்களைப்' பற்றி இவ்விதம் கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இயற்கை கற்றுக்கொடுத்ததை கற்றுக்கொன்டு மாபெரும் படைப்புகளைத் தந்த பல படைப்பாளிகள் இருக்கிறார்களே! இவர்களது படைப்புகளெல்லாம் புலப்படுத்துவதென்ன? இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளை அல்ல, இவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கான புரிதல்க்ளையல்லவா. இயற்கையைக் கூர்ந்து அவதானித்து (இயற்கை என்று குறிப்பிடும்பொழுது நான் இங்கு நாம் வாழும் இந்த உலகு, பிரபஞ்சம், வாழும் சமூகம்.. என்று எல்லாவற்றையும் உள்ளடக்கியுள்ளேன்) எத்தனை எழுத்தாளர்கள் அரிய படைப்புகளை , புனைவுகளை வழங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில் எவ்விதம் இவர்கள் கற்றுக்கொண்டது கேள்விக்குறிகளைத் தவிர என்று அறுதியாக, உறுதியாகக் கூற முடியும்?

      சினைப்படுத்த முடியாத
      சிந்தனைகளுக்காக
      முனைப்பெடுத்துப்போகும்
      முற்போக்குவாதிகளாய்...

      லெனின், காஸ்ட்ரோ, மார்க்ஸ்,மாவோ போன்றவர்களும் எழுத்தாளர்களே. அபுனைவுகளை வழங்கியவர்கள் இவர்கள். மார்க் , லெனின், மாவோ, காஸ்ட்ரோ போன்றவர்கள் முற்போக்குவாதிகள். இவர்களின் சிந்தனைகள் சினைப்படுத்தப்பட முடிந்த சிந்தனைகள். சினைப்படுத்தக் கூடிய சிந்தனைகளுக்காக முனைப்பெடுத்துப் போனவர்கள் இவர்கள். இன்றும் எத்தனையோ படைப்பாளிகள் உலகெங்கும் சினைப்படுத்த முடிந்த தங்கள் சிந்தனைகளால் முனைத்தெழுந்திருக்கின்றார்கள்.

      எனவே நண்பர் பொதுவாகக் குறிப்பிடுவதுபோல் தென்பட்டாலும், குறித்த சில நாடுகளில் வாழும் சிலரை மனதில் வைத்தே சொல்லியிருப்பதாகக் கருதுகின்றேன்.
      See More
      August 10 at 10:14pm · · 1
    • Thiru Thirukkumaran
      சினைப்படுத்த முடியாத

      சிந்தனைகளுக்காக

      முனைப்பெடுத்துப்போகும்
      ...

      முற்போக்குவாதிகளாய்...

      யாருக்கு யார்....என்ன வியாபாரம்?//
      See More
      Saturday at 7:03am · · 2
    • Amalraj Francis I like it.. Nice sir.
      Saturday at 12:19pm · · 1
    • Anand Prasad Giritharan Navaratnamஇந்த இருபத்தோராம் நூற்றாண்டில்
      இதமாக, படைப்பாளியின் ஆத்மாவை
      இரணமாக்காது கருத்துப்பகிர்ந்த தங்கள்
      உயர்ந்த பண்பை வெகுவாக நேசிக்கிறேன்.
      Saturday at 6:09pm · · 1

No comments:

Post a Comment